பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு 2;

சார்பெழுத்தென்றும் இருவகையினையுடைந்து எனக் கூறினர். எழுத்தெனச் சிறப்பித்துச் சொல்லப்படும் உயிரும் மெய்யுமாகிய முப்பதெழுத்தினையும் தனியே இசைத்தல் பற்றி,

உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே. நன். 59

என்பதனால் முதலெழுத்தெனப் பெயரிட்டுரைத்தார்.

 அகரம் முதலிய முப்பதும் நெடுங்கணக்கினுட் பெறப்படுதலின், அவற்றை விதந்தோதாது, அகர முதல் னகரவிறுவாய் என முதலும் இறுதியும் எடுத்தோதினார். இங்ஙனம் கூறலான் அகர முதலாக னகரமீறாக வழங்குதலே எழுத்தினது முறையாம் என்பதும் பெறப்படும். இதனை மேற்கொண்டே, . -
 சிறப்பினு மினத்தினுஞ் செறிந்திண் டம்முதல் நடத்தல் தானே முறையாகும்மே. நன். 73) 

என நன்னூலிலும் எழுத்துக்களின் முறை கூறப்பட்டது. முப்பஃதென்ப என்பதனால் எழுத்தின் தொகை கூறினார்.

அவைதாம் - குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன. தொல். )

இது மேற். சார்ந்துவருமென்ற மூன்றிற்கும் பெயரும் முறையுங் கூறுகின்றது. .

 இ-ள்) மேற் சார்ந்துவருமெனப் பட்டவைதாம் குற்றிய விகரமும் குற்றியலுகரமும் ஆய்தமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவும் ஆம்; அவையும் முற்கூறிய முப்பதெழுத்தினோடு ஒரு தன்மையவாய் வழங்கும் எ-று.

முற்கூறிய இரண்டும் உம்மை தொக்கு நின்றன. ஒரு மொழியைச் சார்ந்துவரு மியல்பன்றித் தனித்தியங்கு மியல்பு தமக்கில வென்றலின், அவைதம்மை யெடுத்தோதிக் காட்டலா காமையின், அவற்றிற்குக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என வேறு வேறு பெயரிட்டு ஈண்டு எடுத்தோதினார். அவை தனித்தொலிக்கப் பெறாவாயினும் மொழியோடு சார்த்தி யிசைக்கப்படுதலின் எழுத்தென்றற்கு ஒருவகையான் உரியவென்பார், எழுத்தோரன்ன என்றார். முற்றியலுகர இகரங்களோடு இவற்றினிடை வேற்றுமை தெரிதற்பொருட்டு