இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74
தொல்காப்பியம்-நன்னூல்
கூற்றானும் குறிலிணை முதலியனவாகத் தொடர்ந்த குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்தின் இயல்புடைய என்பது போதரும். இக்கருத்தே பற்றி ஆசிரியர் தொல்காப்பியனாரும் குறிற்கீழ் நின்ற ஆகாரம் குறுகுதலைக் கூற வந்தவிடத்துக் குறிற்கீழ் ஆகாரம் அகரமெனக் குறுகுமென்றுரையாது அவ் ஆகாரத்தின் உறுப்ப்ாகிய ஒருமாத்திரை யளவினையுடைய அகரம் கெடுமென்பதுபட,
குறியத னிறுதிச் சினைகெட வுகரம் அறிய வருதல் செய்யுளு ளுரித்தே, (தொல். 156)
எனச் சூத்திரஞ் செய்தலானும்-விரல்தீது என்பது முதலாக வரும் குறலிணை யொற்றை நெடிற்கீழ் ஒற்றெனக் கருதிக் கெடுத்தற் கேற்ப, பின்னர் 150-ல் “நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்” என விதி கூறிப்போதலானும், பின்னரும் பல இடங்களில் குறிலிணை எழுத்துக்களை நெடிலியல்பினவாகக் கொண்டு விதி கூறுதலானும் இளம்பூரண ருரையே ஆசிரியர் கருத்தோடு ஒட்டியதாதல் நன்கு துணியப்படும்.
செய்யு ளிறுதிப் போலு மொழிவயின் னகார மகார மீரொற் றாகும். (தொல். 59)
இது செய்யுட்கண் ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது. இ-ள்) செய்யுட்கண் போலும் என்னும் சொல்லினிறுதி யில் ணகாரமும், மகாரமும், வந்து ஈரொற்றுடனிலையாய் நிற்குமென்றவாறு.
(உ-ம்) அந்நூலை - முந்து நூலாகக் கொள்வானும் போன்ம்’ என வரும். போலி மொழிவயின் என்றபாடம் நச்சினார்க்கினியரது அன்றென்பது, போலும் என்னுஞ் செய்யுமென்னுமுற்று ஈற்றுமிசையுகரம் மெய்யொழித்துக் கெட்டு லகராம் திரிந்து நின்றது எனவரும் அவருரையாற் புலனாம்.
னகாரை முன்னர் மகாரங் குறுகும். (தொல். 52)
இது மேல் ஈரொற்றாய் வரும் என்ற மகரம் தன்மாத்திரையிற் குறுகுமென்கின்றது.
(இ-ள்) முற்கூறிய னகரத்தின் முன்னர் வந்த மகரம் தன் அரை மாத்திரையிற் குறுகி நிற்கும்.
“இனித் தன்னின முடித்தல் என்பதனால் ணகார வொற்றின் முன்னும் மகரங் குறுகுதல் கொள்க. ‘மருளினும் எல்லாம் மருண்ம்’ எனவரும்” என நச்சினார்க்கினியர்