உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தொல்காப்பியம்-நன்னூல்



பொருளுணர்த்தலின், ஆசிரியர் தொல்காப்பியனாரால் மொழிக்கு முதலாகு மெழுத்துக்களில் ககரம் சேர்க்கப் படாதாயிற்று.

     சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
     அ ஐ ஒளவெணு மூன்றலங் கடையே.     (தொல். 62)

(இ-ள்) சகரமாகிய தனி மெய்யும் அ, ஐ, ஒள, வென்னு மூன்றுயிரும் அல்லாதவிடத்து முற்கூறியவை போல அவை தவிர ஏனை உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாம் (எ-று). எனவே அ, ஐ, ஒள, என்னும் மூன்று உயிரோடுங்கடிச் சகரம் மொழிக்கு முதலாகாதென்பது கூறப்பட்டது.

     சையம் செளரியம் என்றற் றொடக்கத்து வட சொற்களிலும், சட்டி, சமழ்ப்பு என்பனபோலத் தொல்காப்பியர் காலத்திற்குப்பின் தோன்றிய, “கடிசொல்லில்லை காலத்துப் படினே” என அவரால் தழுவிக் கொள்ளப்பட்ட தமிழ்ச் சொற்கள் சிலவற்றினும் சகரமெய் அ, ஐ, ஒள, என்பதனோடு முதலாய் வருதல் கருதிச் சகரம் பன்னிருயிரொடுங் கூடி மொழிக்கு முதலாமெனக் கொண்டார் நன்னூலார். :
     உ, ஊ, ஒ, ஓ, என்னு நான்குயிர் 
     வ என் எழுத்தொடு வருத லில்லை.  (தொல்.63) 
   (இ-ள்) உ, ஊ, ஒ, ஓ, என்னும் நான்குயிரும் வகர மெய்யோடு கூடி மொழிக்கு முதலாய் வருதலில்லை என்பதாம். எனவே ஒழிந்தனவற்றோடு கூடி மொழிக்கு முதலாமென்றவாறாயிற்று.
     உ, ஊ, ஒ, ஓ, வலவொடு வம்முதல்,   (நன். 103) 

எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்,

     ஆ எ
     ஒ வெனு மூவுயிர் ஞகாரத் துரிய.   (தொல். 64)

இ-ள்) ஆ எ, ஒ என்ற மூன்றுயிரும் ஞகரமெய்யோடு கூடி முதலாதற்குரிய,

     எனவே, ஏனையுயிரோடு ஞகரம் முதலாகாதென்பது பெற்றாம். நன்னூலார் ஞமலி என்றற்றொடக்கத்துச் சொற்கள் பிற்காலத்துத் தோன்றினமை கண்டு ஞகரம் அகரத்தோடும் முதலாமெனக் கொண்டு,