பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 எங். காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் ஒப்பிற் புகழிற் பழியின் என்ரு பெறலின் இழவிற் காதலின் வெகுளியிற் செறுத்தலின் உவத்தலிற் கற்பின் என்ற அறுத்தலிற் குறைத்தலிற் ருெகுத்தலிற் பிரித் தலின் நிறுத்தலின் அளவின் எண்ணின் என்ரு ஆக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலின் நோக்கலின் அஞ்சலிற் சிதைப்பின் என்ரு அன்ன பிறவும் அம்முதற் பொருள என்ன கிளவியும் அதன்பால என்மனர் . இஃது இரண்டாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ-ள்) காப்பு முதல் சிதைப்பு ஈருகச் சொல்லப்பட்ட இருபத்தெட்டுப் பொருளும் அவை போல்வன பிறவுமாகிய அம்முதற் பொருள் மேல் வரும் எல்லாச் சொல்லும் இரண்டாம் வேற்றுமைப்பால என்று சொல்லுவர் புலவர். எ-று. என்ரு என்பன எண்ணிடைச் சொற்கள். ஈண்டு நின்ற இன் எல்லாம் சாரியை ஆயின என்பர் இளம்பூரணர். அம் முதற் பொருள் என்ற து முற்குறித்த வினேயும் வினைக் குறிப்பும் பற்றிவரும் செயப்படு பொருளே. (உ. ம்:) எயிலே இழைத்தான் என்பது இயற்றப்படுபொருள். கிளியை ஒப்பும், பொருளை இழக்கும், நானே அறுக்கும், மரத் தைக் குறைக்கும், நெல்லேத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும், அறத்தை ஆக்கும், நாட்டைச் சிதைக்கும் என்பன வேறு படுக்கப்படு பொருள். ஊரைக் காக்கும், தந்தையை ஒக்கும், தேரை ஊரும், குரிசிலப் புகழும், நாட்டைப் பழிக்கும் புதல்வரைப் பெறும், மனைவியைக் காதலிக்கும், பகைவரை வெகுளும், செற்ருரைச் செறும், நட்டாரை உவக்கும், நூலேக் கற்கும், பொன்னேக் நிறுக்கும், அரிசியை அளக்கும், அடைக் காயை எண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், குதினைக் கன்றும், கணேயை நோக்கும், கள்வரை அஞ்சும் என்பன எய்தப்படு பொருள் .