பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்ருெரு வேற்றுமையோடு மயங்குவது உருபுமயக்கம். ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்ருெரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியலாதலின் இது வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. வேற்றுமைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக் கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையோடு தொடர்புடைய விதிகள் சில இவ்வியலிற் கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியல் என்னும்பெயர் பன்மை நோக்கி யமைந்த பெயரென்றும், இதன்கண், யாதனுருபிற் கூறிற்ருயி னும் என்ற சூத்திரத்த ல் உருபுமயக்கமுணர்த்தி, ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினர் என்றும் கூறுவர் சேவைரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களே இளம்பூரணர் 85-ஆகவும் சேவைரையரும் நச்சி ஞர்க்கினியரும் தெய்வச் சிலேயாரும் 34-ஆகவும் பகுத்து உரை கூறியுள்ளனர். பொருள் மயக்கமாவது, ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியன வாக வேற்றுமையியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முத லாகவுள்ள அவ்வவ்வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக் குரிய வேற்றுமைப் பொருளே விட்டு நீங்காது பிறிதொரு வேற்று மையின் பொருளின்கண்ணே சென்று மயங்குதல். இவ்விய லில் 1 முதல் 17 வரையுள்ள சூத்திரங்கள் வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்துவன. அச. கரும மல்லாச் சார் பென் கிளவிக் குரிமையு முடைத்தே கண்ணெ ன் வேற்றுமை. இஃது இரண்டாம் வேற்றுமையோடு ஏழாம் வேற்றுமை மயங்கு மாறு உணர்த்துகின்றது.