பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 உழக்கே உண்பான்-உழக்கு என்னும் முகத்தலளவைப் பெயர் அவ்வளவினதாகிய உணவினையுணர்த்தினமையின் முகத்தலளவையாகுபெயர். கீழைத்தடி விளைந்தது-தடி என்னும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவுடைய விளைநிலத்தையுணர்த்தினமையின் நீட்டலளவை யாகுபெயர். நச்சினர்க்கினியர் உரையெழுதினர்-உரை என்னும் சொல் வின் பெயர் அதன் பொருளுக்கு ஆயினமையின் சொல்லாகு பெயர். விளக்கு முரிந்தது-விளக்கு என்னும் ஒளியின் பெயர் அதற்கு இடமாகிய தண்டினையுணர்த்தினமையின் தானியாகு பெயர், தானம்-இடம். தானி-இடத்தில் உள்ளது. இடத்திலுள்ள பொருளாகிய தானியின் பெயர் தானத்திற்கு ஆயினமையின் தானியாகு பெயர் என்ருயிற்று. திருவாசகம்-திரு என்னும் அடையடுத்த வாசகம் என்னும் முதற் கருவியின் பெயர் அதன் காரியமாகிய நூலுக்கு ஆயின. மையின் கருவியாகு பெயர். இந்நூல் அலங்காரம்-அலங்காரம் என்னும் காரியத்தின் பெயர் அதனைத் தருதற்குக் கருவியாகிய நூலுக்கு ஆயினமை யின் காரியவாகு பெயர். திருவள்ளுவர் படித்தான்-திருவள்ளுவர் என்னும் கருத் தாவின் பெயர் அவர் இயற்றிய திருக்குறளாகிய காரியத்திற்கு ஆயினமையின் கருத்தாவாகுபெயர். ஆதி என்றமையால் உவமையாகுபெயர் முதலியனவும் கொள்ளப்படும். காளை வந்தான்-காளே என்னும் உவமையின் பெயர், அதனையொத்தவனுக்கு ஆயினமையின் உவமையாகு பெயர்.