பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 யாற்றலால் அவ்வி ரண்டுமல்லாத உடையாள் என்னும் மற்ருெரு மொழி அவற்றின் புறத்தே தொக்குநிற்கக் காண்கின் ருேம். எனவே மக்கட் சுட்டு என ஆகுபெயராய் வரும் இருபெயரொட்டும், பொற்ருெடி என அன்மொழித் தொகை யாய்வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். ஆகுபெயராவது, இடையே ஒருவரால் ஆக்கப்படாது இயற்பெயர்ப் பொருளோடு ஒற்றுமையுடையதாய்த் தொன்று தொட்டு வருவது என்பார் ஒன்றன் பெயரான் அதற்கு இயைபிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே என் ருர் நன்னூலார். அன்மொழித்தொகை என்பது இவ்வாறு ஒற்றுமை வேண்டாது இத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது தொக்கு நின்ற இரு மொழிகளின் தொகையாற்றலால் புறத்தே வேருெரு பொருள் மறைந்து நிற்பது என்பது, அன்மொழி என்னும் காரணப் பெயராலும் ஐந்தொகை மொழிமேற் பிறதொகல் அன்மொழி எனவரும் அதன் இலக்கணத்தாலும் நன்கு புலம்ை. ஆகுபெயரென்றும் அன்மொழித்தொகையென்றும்வேறு வேறு இலக்கணமுடையனவாகத் தொல்காப்பியருைம் பவணந்தியாரும் குறிப்பிடுதலால், அவ்விரண்டும் வேருதல் ஒருதலை. ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம்பொருளு ணர்த்தாது பிறிது பொருள் உணர்த்தலால் ஒத்தனவாயினும், ஆகுபெயர் என்பது ஒன்றற்குரிய இயற்பெயராய் அதைேடு தொடர்புடைய பிறிது பொருளுணர்த்தி ஒரு மொழிக்கண்ண தாய்வரும்.அன்மொழித்தொகைஎன்பது அத்தகைய தொடர்பு வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலாற் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வரும். இவையே இரண் டிற்கும் வேறுபாடு என்பர் சிவஞான முனிவர். இக்கொள்கையே தொல்காப்பியனர்க்கும் நன்னூலார்க்கும் உடன்பாடாமென்பது தொல்காப்பியச் சூத்திரங்களையும் நன்னுாற் சூத்திரங்களையும் ஒப்பு நோக்கியுணருங்கால் இனிது விளங்கும்.