பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 ஆண்மையடுத்த மகனென் கிளவி, ஆண்மகன் ஆண்மகன் - ஆளும் மகன். பெண்மை யடுத்த மகளென் கிளவி, பெண் மகள் பெண்மகள் - பெண்ணுகிய மகள் எனவிரியும். பெண்மையடுத்த இகர இறுதி, பெண்டாட்டி பெண்டாட்டி - பெண்மையை ஆளுகின்றவள். நம் ஊர்ந்து வரும் இகரம், நம்பி. நம் ஊர்ந்து வரும் ஐகாரம், நங்கை. முறைமை சுட்டா மகன், மகள் என்பன மகன் மகள் என்னும் முறைமையைக் கருதாது ஆண் பெண் என்னும் பொருளில் வழங்குவன. மாந்தர், மக்கள் என்பன பலர்பாற் பெயர்கள். ஆடுஉ - ஆண் மகன். மகடூஉ - பெண்மகள். சுட்டு முதலிய அன்னும் ஆனும் ஆவன, அ, இ, உ, என்னும் சுட்டினை முதலாகக் கொண்டு அன் விகுதியாலும் ஆன் விகுதியாலும் முடியும் பெயர்கள். அவை, அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன் எனவும், அம்மாட்டான், இம்மாட் டான், உம்மாட்டான் எனவும் முறையே அன் விகுதியும் ஆன் விகுதியும் பெற்றுவந்தன. அவை முதலாகிய பெண்டென் கிளவியாவன, சுட்டெழுத்துக்களாகிய அவற்றை முதலாக வுடைய அப்பெண்டு, இப்பெண்டு, உப்பெண்டு என்பனவாம். பெண்தன் கிளவி எனப்பாடம் ஓதி, அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி என எடுத்துக்காட்டுவாருமுளர். பெண்டு? என்பதே சங்கச் செய்யுட்களிற் பயின்று வருதலால் பெண் டென் கிளவி2 என்பதே பொருந்திய பாடமாகும். ஒப்பொடு வரூஉங் கிளவியாவன, பொன்னன்னன், பொன்னன்ள்ை என ஒப்புப்பற்றி வழங்கும் பெயர்கள். ஆண்மகன் முதலாக இங்கு எடுத்தோதப்பட்ட பெயர்கள் மேற்குத்திரத்திற் கூறப்பட்ட அவன் முதலிய பெயர்கள் போலப் பயின்று வாராமையின் இச்சூத்திரத்து வேருக ஒதப் பட்டன.