பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 மேலேச் சூத்திரத்தில் கிளே முதலாகப் பகுத்துக் கூறிய அறுவகைப் பெயர்களுள் ளகரவொற்றும் இகரவுயிரும் பொருந்து தற் கேற்ற அவ்விரண்டிற்றனவாய் வரும்பெயர்களும், தோழி, செவிலி, மகடூஉ, நங்கை, தையல் என எடுத்தோதிய பெயர் களோடு இவைபோல்வன பிறவும் உயர்தினைப் பெண்பாற் பெயர்களாம் என்பது இதன் பொருள். (உ-ம்) தமள், நமள், நுமள், எமள், அவையத்தாள், பொருளாள் , பொன்னுள், முடியாள் என ளகரம் ஏற்றன. ஒருத்தி, குறத்தி, அருவாட்டி, சோழிச்சி, படைத்தலவி என இகரம் ஏற்றன. செங்கண்ணுள், செங்கண்ணி, கூள்ை, கூனி என இரண்டீறும் ஏற்றன. கிளேப்பெயர் இகர விறேலாமையும் எண்ணுப்பெயர் ளகர விறேலாமையும் கருதி ளவ்வொற்று இகரக்கு ஏற்ற ஈற்ற? என்ருர், இன்னன என்றமையால் இகுளே முதலாயின கொள்க. 277. கிளந்த கிளேமுத லுற்றரவ் வீற்றவும் கள்ளெ fைற்றி னேற்பவும் பிறவும். பல்லோர் பெயரின் பகுதி யாகும். எனவரும் நன்னூற் சூத்திரம், உயர்திணைப் பலர்பாற் பெயர் உணர்த்துவதாகும். கிளே முதலாகச் சொல்லப்பட்ட பொருள் எல்லாவற் ருேடும் பொருந்திவந்த ரகரவொற்றை ஈருகவுடைய மொழி களும், கள்ளென்னும் விகுதியை ஈருகவுடைய பெயர்களுள் இவ்விடத்திற்குப் பொருந்தி வருவனவும், இவை போல்வன. பிறவும் பலர் பாற்குரிய பெயர்களாம்?? என்பது இதன் பொருள். பல்லோர் பகுதியின் பெயராம் என இயைத்துரைக்க. பகுதி - பால்.