பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கள்ளிறு, கோக்கள், மனுக்கள் எனப் பகுதிப் பொருள் விகுதியாயும் தமர்கள், வேந்தர்கள் என விகுதிமேல் விகுதி யாயும் வரும். கள்ளிறு அஃறிணைக்கண்ணும் வருதலின் இங்கு உயர்திணைக் கேற்பனவே கொள்ளப்படும் என்பார், கள்ளென் ஈற்றின் ஏற்பவும்: என்ருர், பிறவும் என்றமையால், மாந்தர், மக்கள் என்றற்ருெடக் கத்துப் பலர்பால் குறித்து வருவனவெல்லாங் கொள்க. ளசுஎ. அது விது வுதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வாய்தப் பெயரும் அவையிவை யுவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை யென்னும் பெயரும் ஆவயின் மூன்ருே டப்பதி னேந்தும் பாலறி வந்த வஃறினேப் பெயரே. இஃது அஃறிணைப் பெயரா மாறு உணர்த்துகின்றது. (இ-ள்) அது, இது, உது என வரும் சுட்டுமுதற் பெயரும், அச்சுட்டுக்களே முதலாகக் கொண்டு ஆய்தத்தொடு கூடிவரும் அஃது இஃது உஃது எனவரும் பெயரும், அவை, இவை, உவை எனவரும் பெயரும், அச்சுட்டுக்களே முதலாகப் பெற்று வரும் அவ், இவ், உவ் என்னும் வகர ஈற்றுப் பெயரும், யாது, யா , யாவை என்னும் வினப் பெயரும் என இப்பதினைந்து பெயரும் ஒருமைப் பன்மைப் பால் அறியவந்த அஃறிணைப் பெயராம். எ-று. ளசு அ. பல்ல பலசில வென்னும் பெயரும் உள்ள வில்ல வென்னும் பெயரும் வினேப்பெயர் க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனத்தெனக் கிளக்கு மெண்ணுக்குறிப் பெயரும்