பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 | 'பலவி னியைந்தவும் ஒன்றெனப் படுமே அடிசில் பொத்தகஞ் சேனே யமைந்த கதவ மாலே கம்பல மனேய’ (அகத்தியம்) என வரும் பழஞ் சூத்திரத்தாலறியப்படும். இருதிணையாமாறிதுவென விளக்கப் போந்த பவணந்தியார், உயர்திணையென்மஞர் மக்கட்சுட்டே எனவரும் தொல்காப்பிய நூற்பாவை யடியொற்றி, 26 1. மக்க டேவர் நரக ருயர்தினை மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை . எனச் சூத்திரஞ் செய்தார். (இ - ள்) மக்களும் தேவரும் நரகரும் உயர்திணையாம்; அவரல்லாத (மாவும் புள்ளும் முதலிய) உயிருள்ளனவும் (நிலம், நீர், வளி முதலிய) உயிரில்லனவும் அஃறினையாம். எ-று. மக்கள், தேவர், நரகர் என இவ்வாறு இனமுறையில் வைத்துப் பேசப்படுதல் அவ்வவ்வினத்துக்குரிய உடம்புடன் உயிர் கூடிநின்றவழியே யாதலின், அவ்வுடம்பும் உயிரும் வேருகப் பிரிந்த நிலையிலும் அவற்றை வேறுபடவைத்து எண்ணிய நிலையிலும் அவை அஃறிணையாகவே கொள்ளப்படும். மக்களாகப்பிறந்து நல்வினை தீவினைகளைச் செய்து நல்வினை யாகிய புண்ணியத்தின் மிகுதியால் தேவராயும், தீவினையாகிய பாவத்தின் மிகுதியால் நரகராயும் பிறத்தலின், மக்கள் தேவர் நரகர் எனச் சாதன சாத்திய முறையாற் கூறிஞர். மக்களென்று: கருதப்படும் பொருளே உயர்திணை, அவரல்லாத பிறவெல்லாம் அஃறிணை என வரையறுத்துக்கூறிய தொல்காப்பியர், பின்னர் "இவ்வென அறியும் அந்தம் தமக்கில வாகிய தெய்வஞ்சுட்டிய பெயர் முதலியனவும் உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும்? எனக் கூறுதலாலும் மக்கள் தாமேயாறறிவுயிரே (மரபியல்-33) என வரையறுத்தோதிப் பின் மக்களினத்தோடு தொடர்புடைய கிளேயெனப் படுவாராய் மனவுணர்வுடைய ஆறறிவுயிருள் வைத்துக் கருதுதற்குரிய தேவர் தானவர் முதலியோரையும் ஓராற்ருன் உயர்திணையுட் சேர்த்து எண்ணுதற்குரிய முறையில்