பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 நிறுத்த முறையானே உயர்திணை வினையாமாறு உணர்த்த எடுத்துக்கொண்ட ஆசிரியர், உயர்திணைக்குரிய தன்மைவினே யும் படர்க்கைவினையுமாகிய இருவகையுள் தன்மைவினை யைக் கூறத்தொடங்கி இச்சூத்திரத்தால் பன்மைத் தன்மை உணர்த்துகின்ருர். (இ-ள்) மேல் மூவகைய எனப்பட்ட வினேச்சொல் தாம், அம், ஆம், எம், ஏம் என்னும் இறுதியையுடைய சொல்லும், உம்மொடு வரூஉங் கடதறவாகிய கும் டும் தும் றும் என்னும் இறுதியையுடைய சொல்லும் என அவை எட்டும் பன்மை யுணர்த்தும் தன்மைச் சொல்லாம். எ-று. உம்மொடு வரூஉங் கடதற - உம் ஊர்ந்து வரும் ககர, டகர, தகர, றகர வொற்றுக்கள்; அவையாவன கும், டும், தும், றும் என்பன. தன்மையிடத்திற் சொல் நிகழ்த்துவாளுகிய தனக்கு ஒருமையல்லது இன்மையால், தன்மைப் பன்மையாவது தன் ைெடு பிறரை உளப்படுத்ததேயாகும். பேசுவோன் தன்னக் குறித்துக் கூறும் ஒருமைத் தன்மையைத் தனித்தன்மை யென்றும் படர்க்கையாரையும் முன்னிலேயாரையும் அவ்விரு திறத்தாரையும் தன்னெடு உளப்படுத்திக்கூறும் பன்மைத் தன்மையை உளப்பாட்டுத்தன்மை என்றும் வழங்குதல் மரபு. அம், ஆம் என்பன முன்னின்ருரை உளப்படுக்கும். தமராய வழிப் படர்க்கையா ரையும் உளப்படுக்கும். எம், ஏம், என்பன படர்க்கையாரை உளப்படுக்கும். உம்மொடு வரூஉங் கடதறவாகிய கும், டும், தும், றும் என்பன அவ்விரு வகையாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் தனித்தனி உளப்படுத்தலும் உடையன என்பர் இளம்பூர னரும் சேவைரையரும். இவ்வுரைக் குறிப்பினே அடியொற்றி யமைந்தது, 381. அம்மா மென்பன முன்னிலே யாரையும் எம்மே மோமிவை படர்க்கை யாரையும் イち