பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 உளய்ங். அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும் கண்ணென் வேற்றுமை நிலத்தி னுைம் ஒப்பினனும் பண்பி னுை மென் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். இஃது உயர்திணை வினைக்குறிப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) ஆரும் வேற்றுமையது உடைமைப் பொருட்கண் னும் ஏழாம் வேற்றுமையது நிலப் பொருட்கண்ணும் ஒப்பின் கண்ணும் பண்பின்கண்ணும் அப்பகுதிக்காலம் குறிப்பால் தோன்றும். எ-று. அப்பகுதிக் காலமாவது அப்பொருட்பகுதி பற்றி வரும் சொல்லகத்துக் காலமாம். அப்பகுதிக்காலம் குறிப்பால் தோன்று மெனவே, அப்பொருள் பற்றி வினைக்குறிப்பு வரும் என்பதாம். அதுச் சொல்வேற்றுமை-ஆரும். வேற்றுமை உடைமை என்பது, உடைமைத் தன்மையையும் உடைமைப் பொருளே யும் குறிக்கும். இதனை இஃது உழைத்து’ என்பதுபட வரும் எல்லா வாய்பாடும் தழுவுதற்கு அதுச்சொல் வேற்றுமை யுடைமையானும் என்ருர். கண்ணென் வேற்றுமை நிலத்தி னுைம் என்ற தொடர்க்கும் இவ்விளக்கம் பொருந்தும். (உ-ம்) கச்சினன், கழலினன் எனவும், இல்லத்தன், புறத்தன் எனவும், பொன்னன்னன், புலிபோல்வன் எனவும், கரியன், செய்யன் எனவும் வரும். வனந்தான் என்னும் தெரிநிலை வினைமுற்றுச்சொல், செய்தான் என்னுங் காரியத்தினே நிகழ்த்துங் காரணங்கள் எட்டினையும் உள்ளடக்கி வினைமுதலோடு அமைந்து மாறி நின்று, அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படு பொருள் முதலிய ஏழினையும் விரித்து நிற்குமாறுபோல, உடை யன் என்னும் வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், உடையணுயிருந் தான் எனவிரிந்துழி உணரப்படுங் காரியத்தின நிகழ்த்துங் காரணங்கள் எட்டினையும் உள்ளடக்கி வினைமுதலோடு மாறி நின்று, அவாய் நிலை தோன்றிய காலத்துச் செயப்படுபொருள் 76