பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 நாதர் உரைக்குறிப்பு, செய்கின்ற” என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாடு புதியன புகுதல் என்பதனேக் குறிப்பாற் புலப்படுத்தல் காண்க. (உ-ம்) நின்ற ஒருவன், நிற்கின்ற ஒருவன், நிற்கும் ஒருவன் எனவரும். இவ்வாறே ஏனையவற்ருேடும் ஒட்டுக. கரிய கொற்றன், செய்ய கோல் என்பன பெயரெச்ச வினைக் குறிப்புக்களாம். ஓடாக்குதிரை, பாடாப் பாணன் என்புழி ஒடா, பாடா எனவரும் எதிர்மறைப் பெயரெச்சங்கள், ஓடாமையைச்செய்த, பாடாமையைச் செய்த எனப் பொருள்படுதலின் செய்த? என்னும் வாய்பாடாகவே கொள்ளத்தக்கன என்பர் மயிலே நாதர் . 'காலமும் வினையுந் தோன்றிப்பால் தோன்ருது பெயர் கொள்ளும்மது பெயரெச் சம்மே? என்ருர் அகத்தியனுர்?’ எனப் பெயரெச்சத்திலக்கணமாகப் பழஞ்சூத்திரமொன்றை மேற்கோள் காட்டுவர் மயிலேநாதர். இப்பெயரெச்சங்கள் காரணப் பொருட்டாயும் காரியப் பொருட்டாயும் இவ்விருதிறத்தவாயும் வரும் என்பர் சிவஞான முனிவர். உங்டு. அவற்ருெடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற் கண் வரைந்த மூவீற்று முரித்தே. இது, செய்யும் என்பதற்கு ஒர் முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்) செய்யுமென்னுஞ்சொல், நிலமுதலாகிய அறு வகைப் பொருளோடுங் கூடி வருங்கால், முன்னர் விலக்கப் பட்ட பல்லோர் படர்க்கை, முன்னிலே, தன்மை மூவகைக்கும் உரியதாய் வரும். எ-று. (உ-ம்) உண்ணும் அவர், உண்ணும் நீ, உண்னும் யான் என மூவகைக்கும் உரியதாய் வந்தவாறு காண்க.