பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 இடைச்சொற்களே. குறிப்பு என்பது சொல்லுவான் கண்ண தாயினும் அவன் குறித்த பொருளேச் சொற்கள் தாங்கி நிற்றலின் தத்தங்குறிப்பின் பொருள் செய்குந? என்ருர் . அசைநிலை, இசை நிறை, தத்தங்குறிப்பிற் பொருள் செய்குந ஆகிய இம்மூவகை இடைச்சொற்களும் இவ் இடையியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்பில் வழியாற் பொருள் செய்குந என்றது. ஒப்புமை உணர்த்தும் ஒத்தல் என்னும் சொல் இல்லாத நிலையில் ஒப்புமைப் பொருளேயுணர்த்தும் அன்ன ஆங்க முதலிய உவமவுருபுகளே. பொருள் புலப்பாடாகிய உவமைக்குரிய இவ்வுருபுகள் பொருளதிகாரத்தில் உவமவியலில் விரித்துரைக்கப்படும். இடைச்சொல் ஏழனுள் முதல் நின்ற மூன்றும் மேலே உணர்த்தப்பட்டமையால் முன் வைத்தார். ஒப்பில் வழியாற் பொருள் செய்குந பின்னர் உணர்த்தப்படுதலின் இறுதிக்கண் வைத்தார், எஞ்சிய மூன்றும் இவ்வியலின் உணர்த்தப்படுதலின் இடை வைத்தார். உடுக. அவைதாம், முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலேயலும் அன்னவை யெல்லாம் உரிய வென்ப. இஃது இன்னும் அவ்விடைச்சொற் குரியதோர் பொதுவிதி கூறுகின்றது. (இ.ஸ்) மேற்சொல்லப்பட்ட இடைச்சொற்கள்தாம் இடை வருதலேயன்றித் தம்மாற் சாரப்படுஞ்சொற்கு முன்னும் பின்னும் வருதலும், தம்மீறு வேறுபட்டு வருதலும், பிறிதோரிடைச்சொல் தம்முன் வந்து சாரப்பெறுதலும் ஆகிய அத்தன்மையவெல் லாம் உரிய வென்று கூறுவர் ஆசிரியர். எ.று. (உ.ம்) அதுமன்? எ-ம். கேண்மியா? எ-ம். சாரப்படு மொழியை முன்னடுத்து வந்தன. கொன்னூர் எ-ம். ஒஒவினிதே எ-ம் பின்னடுத்து வந்தன. (ஈண்டு முன்பின் என்பன இடப்பொருள.) உடனுயிர் போகுகதில்ல: என்புழித்