பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 நிறையாய் வந்தது. 'பல் குரைத் துன்பங்கள் சென்றுபடும்?? (திருக்குறள்-1045) என்புழிக் குரை அண்சநிலையாய் நின்றது. இசை நிறையாயும் அசைநிலையாயும் வரும் ஏகாரம், பெரும்பாலும் தொடர்மொழி முதற்கண் பிரிந்து நின்றல்லது வாராமையின், சார்ந்த டிொழியோடு ஒன்றுபட்டிசைத்து இடையும் இறுதியும் நிற்கும் தேற்றேகாரம் முதலியவற்றேடு ஒருங்கு கூருது இதனை வேறு கூறினர் எனவும், ஏ, குரை என்பன வற்றுள் ஒரு சொல்லே இசை நிறையும் அசைநிலையுமாகலுடை மையான் இவற்றை ஒரு சூத்திரத்தில் இயைத்துக்கூறினர் எனவும் கூறுவர் சேனவரையர், உஎங். மாவென் கிளவி வியங்கோ ள ைசச்சொல். இது, மா என்னும் இடைச்சொல்லின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) மா என்னும் இடைச்சொல் வியங்கோளேச்சார்ந்து அசைநிலேயாய் வரும். எ-று. (உ-ம்) புற்கை யுண்கமா கொற்கை யோனே? எனவரும். இச்சூத்திரத்தை, இவ்வாறே 438, மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். என நன்னூலில் எடுத்தாள்வர் பவணந்தி முனிவர். உஎச. மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னும் ஆவயி றுை முன்னிலே ய ைசச்சொல். இது, முன்னிலேயசைச்சொல் இவையெனத் தொகுத் துரைக்கின்றது. (இ-ள்) மியா, இக, மோ, மதி, இகும், சின் என்னும் இடைச்சொற்கள் ஆறும் முன்னிலைமொழியைச் சார்ந்துவரும் அசைச் சொல்லாம். எ.று. (உ-ம்) கேண்மியா, கண்பனியான்றிக, கண்டது மொழிமோ, உரைமதி, மெல்லம் புலம்ப கண்டிகும், ! 'காப்பும் பூண்டிசின் என முறையே மியாமுதலிய ஆறும் முன்னிலேக்கண் அசையாய் வந்தன.