பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 மேற்குறித்த ஆறினுள் ஆசிரியர் தொல்காப்பியனரால் ஏனையிடத்தொடும் வரும் எனப் பின்வரும் சூத்திரத்தா ற் பிரித்துரைக்கப்படும் இகும், சின் என்னும் இரண்டினேயும் நீக்கி, அவராற் கூறப்படாத அத்தை, இத்தை, வாழிய, மாள', ஈ, யாழ என்னும் ஆறிடைச் சொற்களையும் கூட்டி இப்பத்திடைச் சொல்லும் முன்னிலேக்கண் அசைநிலையாய் வரும் என்ருர் பவணந்தி முனிவர். 439. மியாயிக மோமதி யத்தை யித்தை வாழிய மாளவீ யாழமுன் னிலேயசை. என்பது நன்னூற் சூத்திரம். 'மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள , ஈ, யாழ என்னும் இப்பத்திடைச் சொல்லும் முன் னிலேக்கண் அசைநிலையாய் வரும்: ) என்பதாம். (உ.ம்) மெல்லியற் குறுமகள் உள்ளிச் செல்வ லத்தை (புறம் - 196) எனவும், வேய்நரல் விடரகம் நீயொன்று பாடித்தை (கலி -40) எனவும், காணிய வா வாழிய மலேச்சாரல்’ எனவும், சிறிது தவிர்ந்தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார் எனவும், சென்றி பெரும நிற் றகைக்குநர் யாரோ எனவும், நீயே செய்வினை மருங்கிற் செலவயர்ந்தியாழ நின், கைபுனே வல்வின் ஞாணுளர் தீயே (கலி-7) எனவும் அத்தை முதலியன முன்னிலேக்கண் அசையாய் வந்தமை காண்க. உண்டு. அவற்றுள், இகுமுஞ் சின்னும் ஏனே யிடத்தொடுந் தகுநிலை யுடைய வென்மனர் புலவர். இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட முன்னிலேயசைச்சொல் ஆறனுள் இகும் சின் என்னும் இரண்டசைகளும் படர்க்கைச் சொல் லோடும் தன்மைச் சொல்லோடும் பொருந்தும் நிலையுடைய என்று கூறுவர் புலவர். எ-று.