பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 ாடங்க. முரஞ்சன் முதிர்வே. ாடங்ச. வெம்மை வேண்டல். (இ-ள்) புலம்பு என்னும் சொல் தனிமை என்னும் குறிப்பு ணர்த்தும், துவன்று என்னுஞ் சொல் நிறைவு. என்னும் குறிப்புணர்த்தும். முரஞ்சல் என்னுஞ் சொல் முதிர்வு என்னும் குறிப்புணர்த்தும். வெம்மை என்னுஞ் சொல் விரும்புதலாகிய பண்புணர்த்தும். (உ. ம்) புலிப்பற் கோத்த புலம்பு மணித்தாலி’ எனவும், ‘ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்’ எனவும், 'சூன் முரஞ் செழிலி: எனவும், 'எம் வெங் காமம்’ எனவும் வரும். உங்டு. பொற்பே பொலிவு. கங்கள். வறிது சிறிதாகும். டிங்.எ. ஏற்ற நினைவுந் துணிவு மாகும். (இ-ள்) பொற்பு என்னுஞ்சொல் பொலிவு என்னும் குறிப் புணர்த்தும். வறிது என்னுஞ்சொல் சிறிது என்னும் குறிப் புணர்த்தும். ஏற்றம் என்னுஞ் சொல் நின்வும் துணிவுமாகிய குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) பெருவரை யடுக்கம் பொற்ப? எனவும், வறிது வடக்கிறைஞ்சிய' எனவும், 'கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி? எனவும், ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்? எனவும் பொற்பு-பொலிவு என்னுங் குறிப்பிலும், வறிதுசிறிது என்னுங் குறிப்பிலும், ஏற்றி - நினைந்து, ஏற்றம்-துணிவு என்னுங் குறிப்பிலும் வந்தவாறு காண்க . டிங்அ. பிணையும் பேணும் பெட்பின் பொருள. (இ-ள்) பினே, பேண் என்னும் உரிச்சொற்கள் பெட்பு என்னுஞ் சொல்லினது பொருளையுடைய, எ-று.