பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 கட்சு அ. அவற்றுள், இயற்சொற் ருமே செந் தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே. இஃது இயற்சொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள், இயற்சொல்லாவன செந்தமிழ் நிலத் கார் வழங்கும் வழக்குடன் பொருந்தித் தம் பொருளின் வழுவா மல் நடக்குஞ் சொல்லாம். எ.று. திரியின்றி இயல்பாய்ப் பொருளுணர நிற்றலின் இயற்சொல் எனப்பட்டன. அவையாவன நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன. செந்தமிழ் நிலமாவன: வையை யாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும்? என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு கொள்ளுதற்குத்தக்க ஆதாரமில்லாமையானும் வையை யாற் றின் தெற்காகிய மதுரையும் கருவூரின் மேற்காகிய வஞ்சியும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் அன்னேர் கருத்துப்படி தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. "வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வேங்கடத் திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் தமிழ் கூறும் நல்லுலகம்’ எனப் பனம்பாரனர் கூறுதலானும், கிழக்கும் மேற்கும் எல்லேகூருது வடக்கின் வேங்கடமும் தெற் கின் குமரியும் எல்லே கூறியதல்ை வேங்கடத்தின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்கு மாகிய நான்கு பேரெல்லேக்குட்பட்ட தமிழகம் முழுவதையுமே செந்தமிழ் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமிழ்மக்கள் வழங்கினர் எனக்கொள்ளுதலே பொருத்தமுடையதாம் என்பது, தெய்வச்சிலேயார் உரையாற் புலம்ை. இச் சூத்திரத்தினத் தழுவியமைந்தது, 24