பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 'களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றும்’ என வரும். இதன்கண், களிறும் கந்தும் போலக் கலனும் கூம்பும்? எனவருதல் வேண்டும். அவ்வாறு கூருது கூம்பும் கலனும் என எதிர்மாற்றிக் கூறினமையால் மயக்க நிரனிறை: யாயிற்று. இதனை எதிர் நிரனிறையென வழங்குதலும் உண்டு. இச் சூத்திரப் பொருளே அடியொற்றியமைந்தது, 413. பெயரும் வினேயுமாஞ் சொல்லேயும் பொருளையும் வேறு நிரனிறீஇ முறையினும் எதிரினும் நேரும் பொருள் கோள் நிரனிறை நெறியே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயரும் வினையுமாகிய சொற்களேயும் அவை கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேறு வரிசை யாக நிறுத்திக் கூறிய முறையாயேனும் அதற்கு எதிராயேனும் இதற்கு இது பயனிலை என்பது புலகைக் கூறும் பொருள்கோள் நெறிப்பட்ட நிரல் நிறைப் பொருள் கோளாம்? என்பது இதன் பொருளாகும். சளசு. சுண்ணந்தானே பட்டாங் கமைந்த வீரடி யெண்சீர் ஒட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். இது, சுண்ணமாமாறு கூறுகின்றது. (இ-ள்) சுண்ணமாவது, இயல்பாக அமைந்த ஈரடிக்கண் உளவாகிய எண்சீரை இயையும் வழியறிந்து கூட்டி இயற்றப் படுவதாம். எ-று. பட்டாங்கு-இயல்பு. இயல்பாக அமைந்த ஈரடி எணசர் எனவே தாற்சீரடியாக அமைந்த ஈரடி எண்சீர் என்பதாம். எனவே சுண்ணமாகிய பொருள்கோள் அளவடியிரண்டனுள் அல்லது பிறவிடத்து வாராது என்பதாயிற்று.