பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 அடிமறிமாற்றுப் பொருள்கோள் இதுவென விளக்கி யுரைப்பது, 418. ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும் யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை மாட்சியு மாரு வடியவும் அடிமறி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'பொருளுக்கு ஏற்குமிடத்தே கொண்டு வந்து கூட்டுதற்குப் பொருந்தும் அடியினையுடையனவும், யாதானும் ஒரடியினே எடுத்து முதல் இடைஈறுகளில் யாதானும் ஓரிடத்துக் கூட்டி யுரைத்தாலும் தம் பொருளும் ஓசையும் மாருத அடியினையுடை யனவும் அடிமறி மாற்றுப் பொருள்கோளாம்?’ என்பது இதன் பொருள் . (உ-ம்)'நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கா லீண்டும் இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால்?? (நாலடி-93) என வரும் இப்பாடல், கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங் கால் ஈண்டும், விடுக்கும் வினையுலந்தக்கால், இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம், (இஃதறியார்) நடுக்குற்றுத் தற் சேர்ந்தார் துன்பந்துடையார் என ஏற்புழி எடுத்துக்கூட்டும் அடிகளையுடையதாய் வந்தமையின் அடிமறிமாற்றுப் பொருள் கோளாம். 'மாருக் காதலர்......வாழு மாறே: என்பதனுள் யாதானும் ஒரடியை யெடுத்து யாதானும் ஓரிடத் துக் கூட்டி உச்சரித்துப் பொருளும் ஒசையும் வேறுபடாமை காண்க. 'அடியாக எடுத்துக் கூட்டிப் பொருள் கோடலின், இவை கொண்டு கூட்டுப் பொருள்கோளில் அடங்கா என்பர் மயிலே நாதர். சள கூ. மொழி மாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள் வழிக் கொளா அல். இது மொழிமாற்ருமாறு கூறுகின்றது.