பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 (இ-ள்) மொழிமாற்றினது இயல்பாவது பொருளெதிர் இயையுமாறு நின்ற சொல்லே இடம் மாற்றி முன்னும் பின்னும் பொருள் கொள்ளுமிடம் அறிந்து பொருத்துதலாகும். எ-று. கொளாஅல்-கொளுவுதல்: பொருத்துதல். (உ-ம்.) குன்றத்து மேல குவளே குளத்துள செங்கோடு வேரி மலர் 22 எனவரும். இதனைக் குவளே குளத்துள, செங்கோடு வேரிமலர் குன்றத்து மேல’ என மொழி மாற்றுக. சுண்ணத்தோடு இதனிடை வேற்றுமை யென்னேயெனின், சுண்ணம் ஈரடிஎண் சீருள் அவ்வாறு செய்யப்படும்; இதற்கு அன்னதோர் வரை யறையில்லே! என்பர் இளம்பூரணர், சேனவரையர், ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் பாரி பறம்யின்மேற் றண்ணுமை-காரி விறன் முள்ளுர் வேங்கைவீ தானுனுந் தோளாள் நிறனுள்ளு ருள்ள தலர்: 2 என்ற பாடலே உதாரணமாகக் காட்டி, இதனுள் ,பாரி பறம்பின் மேல் தண்ணுமை தான் நானுந் தோளாள் எனவும், நிறன் காரி விறன் முள்ளுர் வேங்கைவி எனவும், உள்ளுருள்ள தாகிய அலர், ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும் எனவும் முன்னும் பின்னும் பொருளெதிரியைந்தவாறு கண்டு கொள்க: : என விளக்குவர். மேல் அடிமறி மொழிமாற்றென ஓதினமையானும், சுண்ண மொழி மாற்று ஈரடியெண்சீர் என ஒதுதலானும், ஈண்டுச் சொன்னிலை மாற்றி எனப் பொதுப்பட ஒதினமையானும், ஒரடிக் கண் நின்ற சொல்லே அவ்வடிக்கண்ணும் பிறவடிக்கண்ணும் முன் பாயினும் பின்பாயினும் ஆகும் வழிக் கொளுவப்பெறும்?’ எனவும்,

  • பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லேந்தும் மூன்றுதலே யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே: ' என்றவழி, மூன்றுதலேயிட்ட அந்நாலேந்தும்? என ஓரடிக்கண் மொழிமாறி நின்றது.