பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 இங்கு உணர்த்தப்பட்ட அடுக்குச் சொற்கள் பற்றிய இவ் வரையறையினைக் கூறுவது, - 394. அசைநிலை பொருணிலே யிசை நிறைக் கொருசொல் இரண்டு மூன்று நான் கெல்லேமுறை யடுக்கும். எனவரும் நன்னுற் சூத்திரமாகும். அசை நிலைக்கும் விரைவு வெகுளி உவகை முதலிய பொருள் நிலேக்கும், இசை நிறைக்கும் ஒருசொல் அடுக்கிவருங் கால் முறையே இரண்டு, மூன்று, நான்கு என்னும் அளவில் அடுக்கிவரும் என்பது இதன் பொருள். எனவே அசை நிலக்கு இரண்டும் பொருணிலக்கு இரண்டும் மூன்றும், இசை நிறைக்கு இரண்டும் மூன்றும் நான்கும் அடுக்குமென்பதாயிற்று . (உ-ம்) ஒக்கும் ஒக்கும்; அன்றே அன்றே? என்பன அசைநிலையடுக்கு. போ போ போ என்பன விரைவு பற்றிய பொருள் நிலையடுக்கு. பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ: இசை நிறையடுக்கு. ச2 டு. கண்டி ரென்ரு கொண்டி ரென்ரு சென்ற தென்ரு போயிற் றென்ற அன்றி யனைத்தும் வினவொடு சிவணி நின்றவழி யசைக்குங் கிளவி யென்ப். இது, வினச்சொற்களுள் சில அசைநிலையாம் என்கின்றது. (இ-ஸ்) கண்டீர் எனவும் கொண்டீர் எனவும் சென்றது எனவும் போயிற்று எனவும் வரும் அவ்வினைச் சொற்கள் நான்கும் வினவொடு பொருந்தி நின்றவழி அசைநிலையடுக்காம். எஉறு. ஒருவன் ஒன்று கூறியவழி அதற்கு உடம்படாதான் கண் டீரே, கண்டீரே என்னும். அவ்வழி அச்சொற்கு வினைப் பொருண்மையும் வினப்பொருண்மையும் இன்மையின் அசை நிலையாயினவாறு கண்டு கொள்க. ஏனையவும் இவ்வாறே அடுக் கியும் அடுக்காதும் அசைநிலையாம். அன்றியனைத்தும்-அவ்வனைத்தும்.