பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425 (இகள்) அவ் வும்மையெச்சத்தின் முன்னர் முடிக்குஞ் சொல் உம்மையில்லாத சொல்லாய் வருங்காலத்து நிகழ்காலத் தொடு எதிர்காலமும் இறந்தகாலத்தொடு எதிர்காலமும் முறை யானே வந்து மயங்குதலே நீக்கார் ஆசிரியர். எ-று. ‘முறை நிலையான என்ற தல்ை இங்குக் கூறிய முறை யானன்றி எதிர்காலம் முன்னிற்ப ஏனேக்காலம் பின்வந்து மயங்குதல் இல்லே என்பதாம். (உ-ம்) கூழுண்ணு நின்ருன் சோறும் உண்பன் எனவும், கூழுண்டான் சோறும் உண்பன்’ எனவும் நிகழ்காலத்தொடு எதிர்காலமும், இறந்த காலத்தொடு எதிர்காலமும் கூறிய முறையான் மயங்கி வந்தன. இவற்ருெடு மயங்குதல் வரையர்ர் எனவே இறந்தகாலத்தோடு நிகழ்காலமும் நிகழ்காலத்தோடு இறந்தகாலமும் வந்து மயங்குதல் நீக்கப்படும் என்றவாரும். இங்குத் தன் என்றது, சோறும் உண்பன் எனவரும் உம்மையெச்சத்தை, செஞ்சொல் என்றது. கூழுண்ணு நின்றன் என உம்மையில்லாது வரும் சொல்லினை, உம்மையெச்சத்தொடு தொடர்ந்த சொல்விரண்டிற்கும் வினே ஒன்றேயாதல் வேண்டும் என மேலைச் சூத்திரத்திற் கூறினர். அங்ங்னம் கூறப்பட்ட வினே காலம் வேறுபடுதலும் படாமையும் உடைமையான் இன்னவிடத்து இன்னவகை யாலல்லது காலம் வேறுபடாது என இச்சூத்திரத்தால் வரை யறை கூறினர். சா.அ. எனவெ னெச்சம் வினேயொடு முடிமே. இஃது எனவென்னெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) எனவென்னும் எச்சம் வினைகொண்டு முடியும் எ-று . (உ-ம்) கொள்ளெனக் கொடுத்தான்; துண்ணென த் துடித்தது; ஒல்லென வொலித்தது; காரெனக் கறுத்தது என வரும். என்று என்னும் எச்சச்சொல்லின் முடிவும் பொருளும்