பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 ஈர்ந்தையோன் என்னும் முற்றிற்கு முடிபாகிய பகைஞன் என்னும் பெயரை இடையினின்ற சொல் விசேடித்து நின்றது. ‘'இழி பிறப்பினேன். ஈயப்பெற்று நிலங்கலனுக விலங்கு பலி மிசையும்?? (புறம்- ) என்புழிப் பெற்று’ என்னுஞ் செய்தெனச்சத்திற்கு முடிபாகிய விசையும்? என்னும் வினையை இடைநின்ற சொற்கள் விசேடித்து நின்றன. இவ்வாறு எழு வாயை முடிக்கும் பயனிலைக்கும் முற்றை முடிக்கும் பெயர்க்கும், வினையெச்சத்தை முடிக்கும் வினைக்கும், பெயரெச்சங்களை முடிக் கும் பெயர்கட்கும் இடையே வருதலின் இவை இடைச் சொல் லாயின என்பது அவர் கருத்தாகும். சடுசு. உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய. இஃது உரிச்சொற்கண் எஞ்சி நின்றதோர் பொருளுணர்ச்சி கூறுகின்றது. (இ.ஸ்) உரிச்சொற்கண்ணும் வேறுபடுத்துஞ் சொல்லா தற்கு உரியன உரியவாம்; எல்லாம் உரிய வாகா , எ-று. 'எனவே உரிச்சொல்லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப் பட்டும் இரு நிலைமையும் உடைய வாய் வருவனவே பெரும் பான்மையென்பதாம் என்பர் சேனவரையர், (உ-ம்) உறுபொருள், தவப்பல, நனி சேய்த்து, ஏகல் லடுக்கம் என முறையே உறு, தவ, நனி, ஏ என வரும் உரிச் சொற்கள் வேறுபடுக்குஞ் சொல்லேயாய் வத்தன. குருமனி, விளங்குகுரு, கேழ்கிளரகலம், செங்கேழ்; செல்லல் நோய், அருஞ்செல்லல்; இன்னற் குறிப்பு, பேரின்னல் என்புழி முறையே குரு, கெழு, செல்லல், இன்னல் என்பன ஒன்றன விசேடித்தும் ஒன்றல்ை விசேடிக்கப்பட்டும் இருநிலைமையும் உடைய வாய வந்தன. சடுஎ. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. இது, வினையெச்சத்திற்குரியதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ன்) மேற்கூறப்பட்ட வினையெச்சமும் வேறுபட்ட பல விலக்கணத்தையுடையன. எ-று.