பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கொல்லோ பலர் கொல்லோ இக் குருக்கத்தி நீழல் வண்டல யர்ந்தார் எனவும் திணையொடு ஆண்மை பெண்மை துணிந்த பன்மையொருமைப் பாலையமும் கொள்ளப்படும். ஒருமையாற் கூறின் வழுவாதல் கருதிப் பன்மை கூறல் என வழா நிலை போலக் கூறினராயினும் ஒருமையைப் பன்மை யாற் கூறுதலும் வழுவாதலால் ஐயப்பொருள் மேல் சொல் நிகழ்த்துமாறு கூறிய முகத்தாற் பால் வழுவமைத்தது இச் குத்திரம் என்பது சேவைரையர் கருத்தாகும். உச உருவென மொழியினு மஃறிணைப் பிரிப்பினும் இருவீற்று முரித்தே சுட்டுங் காலே. திணையையத்துக்கண்ணும் அஃறிணைப் பாலேயத்துக் கண்ணும் சொல் நிகழுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) (தினையையந் தோன்றின வழி) வடிவு எனச் சொல்லக் கருதினும் ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணையியற் பெயராகிய பொதுச்சொற்கண்ணும் இவ்விரு கூற்றினும் கருதியுணருங்கால் ஐயத்தைப் புலப்படுத்தும் பொது வாகிய தன்மை உரித்து. எ-று. உருவு - வடிவு. உருவினும் என்னுது உருவென மொழியி னும் என்றமையால் அப்பொருள்வாகிய வடிவு, பிழம்பு, பிண்டம் என்பனவும் கொள்க. (உ-ம்) குற்றி கொல்லோ மகன் கொல்லோ தோன்று கின்ற உருவு எனவரும். இது திணை ஐயம். ஒன்று கொல்லோ பல கொல்லோ செய்புக்க பெற்றம் எனவரும். இஃது அஃறிணைப் லேயம் , ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ என்றற்ருெடக் கத்து உயர்திகணப் பன்மை யொருமைப் பாலயத்திற்கு உருபு முதலாயின ஏலாமையும், திணையையத்திற்கும் ஏனைப் பாலே யத்திற்கும் ஏற்புடைமையும் சுட்டியுணர்க என்பது போதரச் சுட்டுங்காலை என்ருர், என்பர் சேணுவரையர். சுட்டுதல் - கருதுதல்.