பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 முன் சுட்டுப் பெயர் என்றது, பொருள்வழி வந்த சுட்டினை எனவும், இங்குச் சுட்டு முதலாகிய காரணக் கிளவியென்றது பொருளது குணத்தின் வழிவந்த சுட்டினை எனவும் பகுத் துணர்த்துவர் இளம்பூரணர். இங்குச் சுட்டுமுதலாகிய காரணக் கிளவி என்றது, சுட்டினே முதலாகக் கொண்டு ஏதுப்பொருளில் வந்த அதனன்? என்னும் சொல்லினே. இச்சொல் அதனை அதற்கு என்ருற்போன்று அதன்ை என மூன்ருமுருபு ஏற்று நின்ற சுட்டுப்பெயரோடொப்பதோர் இடைச் சொல்லாகும். இஃது இயற்பெயர்ப் பொருளைச் சுட்டி நிற்கும் சுட்டுப் பெயர் போலாது, தொடர் மொழிப் பொருளைச் சுட்டி நிற்றலின், சுட்டுப் பெயரின் வேறெனவே கொள்ளப் படும் என்பார் சுட்டுப் பெயரியற்கையிற் செறியத் தோன்றும் என்ருர் ஆசிரியர். செயற்கு? என்னும் வினேயெச்சம், (செயல்+கு = செயற்கு என) உருபேற்று நின்ற தொழிற்பெயரோடு ஒப்புமை யுடைத்தாயினும், பகுப்பப் பிளவு பட்டிசையாது ஒன்று பட்டி சைத்தலான், அதனின் வேருயிற்ை போல, இதுவும் உரு பேற்ற சுட்டுப் பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும் பிளவு பட்டிச்ையாது ஒன்று பட்டிசைத்தலான் வேருகவே கொள்ளப் படும். என்பர் சேனுவரையர். சுட்டுப் பெயரியற்கை என்றது, வழக்கினகத்துச் சுட்டப் படும் பொருளேயுணர்த்துஞ் சொற்குப் பின்னிற்றலும் செய்யு ளாயின் ஒரோவழி முன்னிற்றலும் ஆகிய அவ்வியல்பினை , தன்னின முடித்தல் என்பதல்ை சுட்டு முதலாகிய காரணக் கிளவி போன்று தொடர்மொழிப் பொருளேச் சுட்டிவரும் சுட்டுப் பெயரும் வழக்கினகத்துச் சுட்டப்படும் பொருளே யுணர்த்துஞ் சொற்குப் பின்னிற்றலும் செய்யுளாயின் ஒரே வழி முன்னிற் றலும் கொள்ளப்படும். (உ-ம்) சாத்தன் வந்தான், அஃது அரசற்குத் துப்பாயிற்று என வழக்கின்கண் பின்னரும்,

  • ஆக்கமுங் கேடும் அதல்ை வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு (திருக்குறள்-642)

எனச் செய்யுட்கண் முன்னரும் வந்தமை காண்க.