பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மேற்குறித்த மூன்று சூத்திரப் பொருளையும் தொகுத்து வகைபெற விளக்கும் முறையில் அமைந்தது, 898. படர்க்கை முப்பெயரோ டணயிற் சுட்டுப் பெயர் பின் வரும் வினேயெனிற் பெயர்க்கெங்கும் மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். படர்க்கை யிடத்தனவாகிய உயர்திணைப் பெயர், அஃறி ணேப்பெயர், விரவுப்பெயர் என்னும் மூவகைப் பெயரோடு சுட்டுப் பெயர் வினேக்கண் ஒருங்கு வருமாயின் அஃது அவ்வியற் பெயரின் பின்னே வரும்; பெயர்க் கண்ணுயிற் பின்னும் முன்னும் வரும் வழக்கினுள். செய்யுட் கண்ணுயின் இன்ன விடத்து என்னும் நியதியின்றி அப்பெயர்களுடனே பின்னும் முன்னும் வேண்டியவாறு வரப்பெறும்’ என்பது இதன் பொரு ளாகும். (உ-ம்) நம்பி வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; எருது வந்தது, அதற்குப் புல் இடுக; சாத்தன் வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; சாத்தன் வந்தது, அதற்குப் புல் இடுக என வினைக்கட் சுட்டுப்பெயர் பின்னே வந்தது. சாத்தன் அவன், அவன் சாத்தன் எனப் பெயர்க்கண் ஈரிடத்தும் வந்தது. இவை வழக்கியல். செய்யுளாயின் அவனணங்கு நோய் செய்தான் ...............சேந்தன் என இயற் பெயர்க்கு முன் வருதலும் அமையும். இவ்வாறன்றி நம்பியைச் சுட்டிய நிலையில் 'அவன் வந்தான், நம்பிக்குச் சோறுகொடுக்க’ எனச் சுட்டுப் பெயரை வழக்கினுள் முற்கிளத்தல் வழு என்பதாம். சக. சிறப்பி னுகிய பெயர் நிலேக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். இதுவும் ஒருபொருள்மேல் இருபெயர் வருங்கால் வருவ தொரு மரபுவழா நிலே யுணர்த்துகின்றது. (இ-ள்) வினைக்கு ஒருங்கு இயலும்வழிச் சிறப்பிளுகிய பெயர்க்கும் இயற் பெயரை முற்படக் கூருர் பிற்படக் கூறுவர் உலகத்தார். எ-று.