பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பெண்மை அரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென் ருவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்ருெடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கி னிலேயின வாயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். இது, திணைவழுக் காக்கின்றது. (இ-ள்) குடிமை முதலாக விறற்சொல் ஈருகச் சொல்லப் பட்ட அப்பதினெட்டும் உளப்பட அவைபோல்வன பிறவும் அவற்ருெடு பொருந்தித் தொக்குச் சொல்லுவான் குறிப்பொடு படுத்துத் திணைஉணரப்படுஞ் சொற்களெல்லாம் உயர் திணைப் பொருள் மேல் நின்றனவாயினும் அஃறிணைப் பொருளே உணர்த்திநின்றவழிப் போல அஃறிணை முடியே கொள்ளும் எ-று . உயர்திணை மருங்கின் நிலையினவாயினும்? என்ற உம்மை யால், குடிமை முதல் விறற்சொல் ஈருகச் சொல்லப்பட்ட இவையெல்லாம், குடிப்பிறந்தாரது தன்மை ஆளுதற்றன்மை முதலாகப் பண்புகுறித்தவழி அஃறிணையாம் என்பது உம், குடிப்பிறந்தார், ஆண்மையுடையார் ஆகிய பொருள் குறித்த வழி உயர்திணையாம் என்பது உம் கூறியவாருயிற்று. (உ-ம்) குடிமை நன்று, ஆண்மை நன்று, இளமை நன்று எனவரும். ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறே பொருந்தும் வினே யொடும் ஒட்டுக. குடிமையாவது குடிப்பிறந்தாரது தன்மை; ஈண்டுக் குடியிற் பிறந்தாரைக் குறித்து நின்றது. இவ்வாறே ஆண்மை, இளமை, மூப்பு, பெண்மை முதலாயின பண்பினை யும் அப்பண்புடையாரையும் குறித்து வழங்குவனவாகும். அடிமை என்பது ஈண்டு அடிமைத்தொழில் செய்வார் மேற்று. வன்மை என்பது வலியாகிய தன்மை. இச்சொல் வலியதுணை பாயினரைக் குறிப்பதாகும். விருந்து என்பது புதுமை; அஃது புதியராய் வரும் விருந்தினரைக் குறிப்பதாகும். குழு என்பது திரள்; திரளாய்க் குழுமிய மாந்தரைக் குறிப்பது அரசு