பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 என்பது அரசத் தன்மை; அச்சொல் அத்தன்மையுடைய மன்னனைக் குறிக்கும், மக என்பது மகன் மகள் என்னும் முறைப்பெயர் இரண்டற்கும் பொதுவாகி நிற்பது. தன்மை திரி பெயர் என்பது தன் இயல்பிற்றிரிந்த பொருட்பெயர் ; பேடி என உதாரணங்காட்டுவர் இளம் பூரணர்: அலி என்பர் சேவைரை யரும் நச்சிர்ைக்கினியரும்; மருள் என்பர் தெய்வச்சிலேயார். உறுப்பின் கிளவி என்பது குருடு, முடம் என்ருங்கு உறுப்புப்பற்றி வழங்குஞ்சொல். காதல் என்பது யானே வந்தது பாவை வந்தது என்ருங்கு ஒப்புமை கருதாது காதல் பற்றி நிகழுஞ்சொல். செறற் சொல் என்பது பொறியறை, கெழீஇயிலி என்ருங்குச் செற்றம் பற்றி நிகழும் சொல். செறுதலைப் புலப்படுத்துஞ் சொல்லாதலின் செறற் சொல்லாயிற்று. விறற்சொல் என்பது அருந்திறல், காளே, ஏறு என்ருங்கு விறலேயுணர்த்துஞ் சொல். அன்னபிறவும் என்றதனுல் வேந்து, வேள், குரிசில், அமைச்சு, புரோசு முதலாயினவும் கொள்ளப்படும். குடிமை முதல் குழவி யிருக வுள்ள பன்னிரண்டும் சொற்பற்றி எண்ணப்பட்டன. தன்மை திரிபெயர் முதலியன பொருள் வகையான் ஆருக அடக்கப் பட்டன. இச் சொற்களின் தினே வேறுபாடு சொல்லுவான் குறிப் பொடு படுத்து உணரப்படுதலின் முன்னத்தின் உணருங் கிளவி யென்ருர், இவை சொல்லான் அஃறிணையாய் அத்தினைப் பொருளே உணர்த்தி நின்றவழிப் போலவே, உயர்தினைப் பொருளே உணர்த்தி நின்ற வழியும் அஃறிணை முடிபே கோட லின் உயர்திணை மருங்கின் நிலையினவாயினும், அஃறிணை, மருங்கிற் கிளந்தாங்கியலும் என்ருர் . குடிமை முதலாயின. உயர்திணை யுணர்த்தும்வழி அஃறிணையான் முடிதல் வழு வாயினும் அமைகவெனத் தினேவழுவமைத்தவாறு , டுஅ. காலம் உலகம் உயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினேயே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால் பிரிந் திசையா வுயர் திணை மேன. இதுவும் திணைவழுவமைக் கின்றது.