பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 சொற்கள்தம் முதல் வினைக்கியலும் எழுத்தான முடியும் வழித்தமக் குரிய பன்மையாற் கூறப்படும் யாப்புறவுடையவல்ல ள்-று. பிறவும் என்ற தற்ை புருவம், காது, கால், கை என்பனவும் கொள்ளப்படும். கண் தோள் முதலிய பன்மை சுட்டிய உறுப்புப் பெயர்கள் தம் வினைக்கியலும் எழுத்தான் முடிதலும் தம் முதல்வினைக் கியலும் எழுத்தான் முடிதலும் என இருமுடியினை உடையன. அவற்றுள், முதல்வினைக்கியலும் எழுத்தான் முடிவுழி யமைந் ததே இச் சூத்திரவிதி யென்பார், தம் வினைக்கியலும் எழுத்தலங்கடையே’ என்ருர், ஈண்டுத் தம் வினைக்கியலும் எழுத்து’ என்றது கண் முதலிய அஃறிணைப் பன்மைக்குரிய வினைக்கேற்ற ஈற்றெழுத்தாகிய அகரத்தின. தம் முதல் வினைக் கியலும் எழுத்து என்றது, உயர்தினை ஒருமையிறுகளாகிய னகர ளகரத்தினேயும் அத்தினேப் பன்மை யிருகிய ரகரத் தினேயும். (உ-ம்) கண்ணல்லன், தோள் நல்லன் எனவும் கண்ணல் ல ள் தோள் நல்லள், முலே நல்லள் எனவும் கண்ணல்லர், தோள் நல்லர், முலே நல்லர் எனவும் தம் முதல்வினைக்குரிய எழுத்தான் முடிந்தன. கண்ணல்ல, தோள் நல்ல எனத் தம்வினைக்கு இயலும் எழுத்தான் முடிவுழித் தமக்குரிய அஃறினைப் பன்மையிருகிய எழுத்தான் முடியும் என்பதாம். மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என ஒருமைச் சினேப் பெயர் நின்று உயர்திணை கொண்டனவும், நிறங்கரியள், கவவுக்கடியள் எனப் பண்புந் தொழிலும் நின்று உயர்தினை கொண்டனவும் தன்னினமுடித்தல் என்பதல்ை அமைக்கப்படும். அஃறிணைக்கண் சினேவினைக்குரிய எழுத்தோடு முதல் வினைக்குரிய எழுத்திற்கு வேறுபாடின்றி எல்லாம் அஃறிணை யெழுத்தேயாகலின் தம் வினைக்கியலும் எழுத்தலங்கடையே’ என வேறுபடுத்துரைத்தற்கு ஏலாமையின் இச் சூத்திரத்துக் கண்ணுந் தோளும் முலையும் என எண்ணப்பட்டன உயர் தினச் சினேயே யாம் எனத் தெளிவுபடுத்துவர் சேஞ வரையர்.