பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-சு t93»8}

நெஞ்சம் அஞ்சுமாறு தானே (படையொடு) மேற்சென்று; அடல் குறித்தன்று-வென்றடக்குதலைச் சுட்டும் அளவிற்று வஞ்சித் திணை.

குறிப்பு :- இச்சூத்திரத்திற்கு முன்னுரைகாரர் வேறு வகை யாய்ப் பொருள் கூறுவர். அவர் உரை வருமாறு :- எஞ்சா மன்னசை-இரு பெரு வேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணி டத்து வேட்கையானே, அஞ்சுதகத்தலைச் சென்று-ஆண்டு வாழ் வோர்க்கு அஞ்சுதல் உண்டாக அந்நாட்டிடத்தே சென்று வேந் தனை வேந்தன் அடல் குறித்தன்று-ஒரு வேந்தனை ஒரு வேந்தன். கொற்றம் கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித் திணை என்றவாறு:

அதற்குமேல் அவர் தரும் சிறப்புரையாவது :- “ஒருவன் மண்ணசையானே மேற்சென்றால், அவனும் அம்மண்ணழியாமல் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையால் மேற் சேறல் உளதாகலின், இவ்விருவரும் வஞ்சி வேந்தர் ஆவர் என்றுணர்க."

இவருரை, சூத்திரச் சொல்லமைதிக்கு ஏற்காததோடு, வஞ்சி யியல்பை இழிதகுபழிதரும்பிழையொழுக்கமாகவும் பண்ணுகிறது. எஞ்சா மண்ணசை என்ற தொடர் அதை அடுத்து நிற்கும் வேந் தனை என்னும் இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக்கு நேரே அடையாயமைவது வெளிப்படை. அவ்வளவிற்கொள்ளாமல் அத் தொடரைப் பின் வரும் வேந்தன் என்னும் எழுவாய்ச் சொல் லுக்கும் ஏற்றி, அவன் படையெடுத்துச் செல்லுதற்குக் காரணமே மற்றவன் மண்ணிடத்து அவனுக்குள்ள வேட்கையாகுமென இவ்வுரைகாரர் விளக்குகின்றார். மன்னர் போர் கருதிப் படை யெடுப்பதன் நோக்கமெல்லாம் பிறர்மண் கவரும் வேட்கைதான் எனும் கொள்கை நாகரிக உலகம் மதிக்கும் போரறமழித்துப் பழிக் கிடனாக்கும். தக்க காரணமின்றித் தவறற்ற மெலியாரின் நாட்டை வலியார் மண் வேட்கையாலே படையெடுத்துச் சென்று வென்று கவர்தலே வஞ்சித்திணை எனக்கூறுவது உயர்ந்த பழந் தமிழ் ஒழுக்கத்தைப் பழிக்கத்தகும் பிழையாக்கி முடிப்பதாகும். வலிச்செருக்கால் மெலியர் நாட்டைப் பறிப்பது உலகியலில் உண்

1. பகைவேந்தன் தனது நாட்டின் மேற் படையெடுத்து வந்த நிலையில் அவன் தன் னாட்டில் நுழைவதற்கு முன் நாடாள் வேந்தன் அவன் மேற் படை யெடுத்துச் சென்று தாக்குதலும் வஞ்சித்தினையேயாம் என்பது இளம், ர னர் நச்சினார்க்கினியர் ஆகிய பண்டையுரையாசிரியர்கள் கருத்தாகும். படைகொடு மேற்சேறலாகிய வினை இருவர் க்கும் ஒப்பவுரியதாதலின் இருவரும் வஞ்சிவேந்த ர வர் என்பது அன்னோர் கருத்தாகும்.