பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


母袋一令_ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஈங்குக் கோடல் என்பது முற்றியோர் வென்று அரண் கொள்ளு தலையே குறிக்கும். கொள்ளாது முற்றிய கோட்டையை விட்டு விலகுதல் உழிஞை ஆகாமையிற் கோடலும் முற்றலுடன் கூறப் பட்டது. இனி, கோடலை அரண் காவலர் தொழிலாக்கி முற்றலை மட்டும் உழிஞை எனின், முற்றியோர் அரண் கைப் பற்றுதல் உழிஞையில் அடங்காமல், வேறு திணையுமாகாமல், குன்றக் கூறலாய் முடியும்; அன்றியும், முற்றியோர் அரணைப் பற்றாவழி அகப்படை அதனை மீட்டுக்கோடல் இன்மையால், அவரரண் கோடல் உழிஞை என்பது மிகைபடக் கூறலாகும். இன்னும், முற்றியோரை முறையே ஒட்டி அகத்தவர் வெற்றி பெற்றகாலை, அஃது அரண் காத்தலன்றிக் கோடலாமாறில்லை யாதலானும் முற்றியோர் வெற்றியால் அரணைப் பற்றிய பின் தோற்ற காவலர் அவரை முற்றி அரணை மீட்டுக்கோடல் அவ ரளவில் உழிஞையே யாமாதலானும் முற்றியோரும் அரண் காவ லரும் கைகலந்து பொருவது உழிஞையின் இடைஇயல் நிகழ்ச்சி யாவதன்றித் தன்னளவில் தனித்தொரு திணையாமாறு இல்லை யாதலானும், அகத்தவர் எதிர்ப்பை நொச்சியெனத் தனித்தொரு திணையாக்கின் அதற்கு நேராம் அகத்திணை ஒன்று மின்றாத லானும், அகத்தோன் வீழ்ந்த நொச்சியை உழிஞைத் துறைவகை களுள் ஒன்றாயடக்கிப் பின் சூத்திரம் கூறுவதானும் இங்குக் கோடல் என்பது அகத்தவர்க்கு ஆகாமை ஒருதலை."

ஆய்வுரை

. بی . ITاز آلوله இஃது உழிஞைத்திணையின் இலக்கணம் உணர்த்துகின்றது.

(இ-ள்.) உழிஞை என்னும் திணை மருதம் என்னும் அகத் திணைக்குப் புறனாகும். (படையுடன் மேற்சென்ற வேந்தன்)

1. முழுமுதலானம் முற்றலும் கோடலும் என இருவகைத்தொழிஇடையது உழிஞைத்தின் யெனவும், அவ்விருவகைத் தொழிலுக்கேற். அத்தினை இரு நான்கு வகையுடையது எனவும், இவ் விரு வகைத் தொழில்களையும் நிகழ்த்தற் குரிய வேந்தர்கள் அக்த்தோன் புறத்தேன் என இருதிறப்படுவர் எனவும் தொல் காப்பியர் தெளிவாகக் குறிப்பிடுதலால் ஈண்டு முற் றலையும் கோடலையும் ஒருவரது தொழிலாகக் கூறுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அன்றியும், முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி என்பதற்குப் ‘புறத்தோரால் வளைக்கப் பெற்ற அகப்படைத்தலைவன் அரண்காவல் விரும்பிப் புரியும் அமராம் நொச்சியும்? என இவ்வ்ர்சிரியரே உரை வரைந்திருத்தலால் கோடல்: என்பதனைப் புறத்தோனது தொழி லாகிய முற்றுதற்கு எதிராக தனக்குரிய அரணை அகப்படுத்துக் கொள்ளுதலாகிய அகத்தோனது சிகிசி காவற்றொழி லாகக் கொள்ளுதல்ே ஏற்புடையதாகும்! மேலும், ஈண்டு முற்றுதல்’ என்ற து முழுமுதலரனைப் பற்றி நின்று பெர்ரும் போர்நிகழ்ச்சியைச் சுட்டுவதல்லது பகைவர் மதிலை வாள வளைத்துக் கொண்டு நிற்றலை மட்டும் சுட்டுவதன்

றாம்.