பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் نيع سنية يتم

இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன் சிறப்பு எடுத் துரைத்தது.

வயலைக் கொடியின் வாடிய மருங்கு லுயவ லூர்திப் பயலைப் பார்ப்பா னெல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே யேணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யானைடி மணிகளை ந் தனவே.'

(புறம் கட0டு)

இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன் திறங்கண்டோர் கூறியது.

(இவை புறம்.) தொல் எயிற்கு இவர்தலும்-ஒருகாலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப்பகலுள் அழித்துமென்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தலும்;

'மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பியெவ் வாயு மெந்திரப் பறவையியற்றின நிறீஇக் கல்லுங் கவனும் கடுவிசைப் பொறியும் வில்லும் கணையும் பலபடப் பரப்பிப் பத்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறிய முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றுக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குத் தாக்கருந் தானை யிரும்பொறை பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்த்தே, !

இப் பொன்முடியார் பாட்டும் அது.

இதனாற் பூச்சூடுதல் பெற்றாம்.

1. தொல் எயிற்கு இவர் தல்-அழிவில்லாத பழைய மதிலை அழித்தற்கு விருப்பஞ் செய்தல். எயிற்கு-எயிலை; உருபு மயக்கம், தொல் எயிற்றி வர்தல்' என்ற பாடத்திற்குப் பழைய எயிலின் கண்ண தாகிய மதி லுறுப்பின் மேல் ஏறுதல் எனப் பொருள் கொள்க. எயிற்று. -எயிலின் கண்ணதாகிய உறுப்பு. இவர்தல்-ஏறுதல்.