பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


& g 。 தொல்காப்பியம்- பொருளதிகாரம்- உரை வளம்

போர்வீரரது தறுகண் உணர்வாகிய உள்ளத்தின் திண்மை யினைப் பலரும் அறிய விளக்கும் சிறப்புடையது 'தும்பைத்திணை. தானைநிலை முதலாக நூழில் ஈறாகச் சொல்லப்பட்ட தும்பைத் திணைத்துறைகள் பன்னிரண்டும் மைந்து பொருளாக ஒருகளத்துப் பொருது உடற்றும் இருதிறப் படையாளர்க்கும் ஒப்ப அமைந்தன வாகும்.

இளம்பூசணம் :

15. வாகை தானே பாலையது புறனே

தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப.

(இ-ன்.) வாகை பாலையது புறன் - வாகைத்திணை பாலை என்னும் அகத்திணையினது புறனாம்; தாவில் கொள்கை தத்தம் கூற்றை-பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப - அது கேடில்லாத கோட்பாட்டினையுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல் என்பர்.

அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், பாலையாவது தனக்கென ஒருநிலமின்றி எல்லா நிலத்தினும் காலம் பற்றிப் பிறப்பதுபோல இதுவும் எல்லா நிலத்தினும் எல்லாக் குலத்தினும் காலம்பற்றி நிகழ்வதாதலினலும், ஒத்தார் இருவர் புணர்ச்சி யினின்றும் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறுபோலத் தன்னோடு ஒத்தாரினின்றும் நீங்கிப் புகழப்படுதலாலும் அதற்கிது புறனா யிற்று. அஃது ஆமாறு வருகின்ற சூத்திரங்களானும் விளங்கும்.

• & (கடு) நசசா ;

கடு வாகை தானே பாலையது புறனே.

இவ் வாகைத்திணை பாலையெனப்பட்ட அகத்திணைக்குப்

புறனாமென்கின்றது.

1. காவென்பது, வருத்தம், வலி என்னும் பொருளில் வழங்கும் உரிச்சொல் லாகும். இங்கு இச் சொல்லிற்குக் கெடுதல் எனப்பொகள் கொண்டார் இளம் பூரணர். கொள்கை-கோட்பாடு, தத்தம் கூறு-குத் தமக்குச் சிறப்புரிமை யுடைய பண்பும் தொழிலுமாகிய திறங்கள். 1. குபடுதலாவது, பல பகுதிகளாக வகைபெறக்கிளைத்தல்.

2. தனக்கென நிலம்பெறாத பாலைபோல எல்லா நிலத்தும் காலம் பற்றி நிகழ்தலும், ஒத்தார் இருவர் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறு போவத் தன்னோடு ஒத்தாரின் நீங்கிப் புகழப்படுதலும் பற்றிப் பாலைத்திணைக்கு அாகை புறனாயிற்று என்பதாம், - - ... - -: