பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கடு # &#3)

(இ-ள்.) வாகை தானே -இனிக் கூறாதுநின்ற புறத் திணையுள் வாகையெனப்பட்டது தானே; பாலையது புறனேபாலையென்னும் அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.

என்னை? பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி இல்லற நிகழ்த்திப் புகழெய்து தற்குப் புரியுமாறுபோலச், சுற்றத்தொடர்ச்சியின் நீங்கி அறப்போர் செய்து துறக்கம்பெறுங் கருத்தினாற் சேற் லானும், வானினுந் தாளினும் நிறையினும் பொறையினும் வென்றி யெய்துவோரும் மனையோரை நீங்கிச் சேறலானும் பிரிவுளதாயிற்று.

பாலை தனக்கென ஒரு நிலமின்றி நால்வகை நிலத்தும் நிகே மாறுபோல, முற்கூறிய புறத்தினை நான்கும் இடமாக வாகைத் திணை நிகழ்தலிற் றனக்கு நிலமின்றாயிற்று. நாளு நாளு மான் வினை யழுங்க வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழ்' " ஆள்வினைச் சிறப்புக்கூறிப் பிரியுமாறுபோல இதற்குத் துறக்கமே எய்தும் ஆள்வினைச் சிறப்புக் கூறலுங் கொள்க. பாலை பெருவர விற்றாய்த் தொகைகளுள் வருமாறுபோல வாகையும் பெருவர விற்றாய் வருதலுங் கொள்க." (а 9)

கடு (அ)

தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப.

இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறு கின்றது.

(இ-ள். தாவில் கொள்கைத் தத்தங் கூற்றை-வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத் தோரும் அறிவருந் தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடு

1. இல்லறம் நிகழ்த்திப் புகழெய்துதற் பொருட்டுத் தலைமகளைத் தலைவன் பிரிந்து தெ ல்லுதல் பாலையாதல் போன்று, வீரன் அறப்போர் செய்து துறக்கம்பு குங் கருத்தினாற் சுற்றத் தொடர்ச்சியினிங்கிச் செல்வது வாகையாக லானும், வாளினும் தாளினும் நிறையினும் பொறையினும் வென்றியெய்து வோரும் மனையோரைப் பிரிதல் இயல்பாதலானும், தனக்கென ஒர்நிலம் பெறாது நால்வகை நிலத்தும் பாலையொழுக்கம் நிகழுமாறுபோல முற்கூறிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பையென்னும் திணை நான்கினையும் இடமாகக் கொண்டு நிகழ்வது வாகையா தலா னும் சங்கத்தொகை நூல்களுள் பாலைத் திணைப்பாடல்கள் பெருவர விற்றாய் வருதல்போல வாகையும் பெருவாவிற்றாய் வருதலானும் பாலையென்னும் அகத் திணைக்கு வாகை புறனாயிற்றுது என்பு நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும்,