பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


LC) . தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

உழுதலுமாகிய இரண்டு தொழில்களே வேளாண்மாந்தர்க்குரியன வாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் கூறப்பட்டுள்ளன. வடவாரியரது வருகையால் நால்வகை வருணப்பாகுபாடு இந் நாட்டிற் பேசப்படும் நிலையினைப் பெற்ற பிற்காலத்திலே வாழ்ந் தவர் ஐயனாரிதனார். அவர்க்குக் காலத்தாற் பிற்பட்டவர் இளம் பூரணர் நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள். எனவே இருமூன்று மரபின் ஏனோர் என்பதற்கு வணிகரும் வேளாளரும் எனக்கொண்ட உரையாசிரியர்கள் உரைப்பகுதி ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகக் கொள்ளத் தக்கதன்று. பார்ப்பனப்பக்கத்தையும் அரசர் பக்கத் தையும் பகுத்துக் கூறிய தொல்காப்பியனார் தம் காலத்து நால் வகை வருணப்பாகுபாடு தமிழகத்தில் நிலைபெற்றிருப்பின் பார்ப் பனப் பக்கம் அரசர் பக்கம் என்றதுபோல வணிகர் பக்கம் வேளாண்பக்கம் என்பவற்றையும் தனித்தனியே எடுத்துரைத்திருப் பர். ஏனோர் என்னுஞ் சொல் முன்னர் எடுத்துக் கூறப்பட்ட டோர் அல்லாது எஞ்சியுள்ளார் அனைவரையும் சுட்டுவதன்றி வணிகர், வேளாளர் ஆகிய இருதிறத்தாரையும் சுட்டினதெனக் கொள்ளுதற்கு இடமில்லை. இருதிறத்தாரையுமே ஏனோர் எனக் குறித்தனராயின் வணிகர்க்கு மூன்றும் வேளாளர்க்கு மூன்றும் என்றே கூறவேண்டிவரும். இனி இருதிறத்தார்க்கும் உரியவாக அறுவகைத்தொழில்கள் உளவெனக்குறித்தலே 'இருமூன்று மரபின் ஏனோர்பக்கம்’ என்ற தொடரின் கருத்தாயின், அறு வகைத்தொழில்களும் அவ்விரு திறத்தார்க்கும் ஒப்பவுரியன வாகவே எண்ணப் பெறுதல் வேண்டும். இளம்பூரணர் முதலி யோர் கூறுமாறு வணிகர் வேளாளர் ஆகிய அவ்விரு திறத் தார்க்கும் வேறுவேறாக எண்ணப்படும் இருவகை அறுதொழில் களையும் ஒருங்குதொகுத்து இருமூன்று மரபு எனத் தொல்காப் பியர் இணைத்துரைத்தார் என்றல் பொருந்தாது. அன்றியும் வடவாரிய நூல்களிற் பேசப்படும் நால்வகை வருணப்பாகுபாடு ஆரிய இனத்தாரிடையன்றிப் பண்டைத் தமிழ் மக்களிடையே வழங்காத ஒன்றாகும். 'வண்புகழ்மூவர் தண் பொழில்வரைப் பாகிய தமிழகத்தில் மக்களை நிலவகையாற் பகுத்துரைத்த லல்லது குலவகையாற் பகுத்துரைக்கும் வழக்கம் என்றும் நிலவிய தில்லை. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் சிறப்புடைய கொள்கை நிலவிய தமிழகத்தில் தமிழ் மக்களுக்கேயுரிய ஒழுகலாறு களை விரித்துரைப்பது இயற்றமிழ் இலக்கண நூலாகிய தொல் காப்பியம் ஆகும். தமிழியல் நூலாகிய இத் தொல்காப்பிய நூற்