பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


令一2一袋一

தொல்காப்பியம் -பொருளதிகாரம்-உரை வளம்

'ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும்' (குறள்-ஒழுக்-க) "சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி’ (குறள்-நடுவு-அ) 'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனென்றோ வான்ற வொழுக்கு (குறள்-பிறனில்-அ)

'படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நானு பவர்' (குறள்-வெஃகாமை-உ)

அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது’’ (குறள்-புறங்-க) 'தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு’’ (குறள்-தீவினை.) 'ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு' (குறள்-அழுக்காக) 'மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல்' (குறள்-பொறை-அ)

பிறவும் இந்நிகரனவெல்லாங் கொள்க.

"விழையா வுள்ளம் விழையு மாயினுங் கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்த லினையா பெரியோ ரொழுக்க மதனா லசிய பெரியோர்த் தெரியுங் காலை."

(அகம்-உ-அ.சு.அ-கச)

என இது தொகுத்துக் கூறியது.

இடையில் வண்புகழ்க் கொடைமையானும்-இடையீடில்லாத வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்;

உலகமுழுதும் பிறர் புகழ் வாராமைத் தண்புகழ் பரத்தலின் இடையிலென்றார்.

வண்புகழ் - வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும். இக் கொடைப் புகழுடையான் முப்புப் பிணி சாக்காட் டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம்.