பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பாகக. டே சன

தலை, அவள் இறத்தற்கேதுவாகலின் அது வினை முதலா யிற்று. மேல் துறை இரண்டென்பாராகலின், இவை பத்தும் ஒரு துறையாமென்றற்கும் இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் ஈரைந்தென வேறொரு தொகை கொடுத்தார். அவன் தலை யல்லது உடம்பினை அவள் பெறாமையின், அவன் யாக்கைக்கு நிலையின்மை யெய்தலின், இதுவும் ஆண்பாற்கே சிறந்ததாம். மனைவி இறந்துபடுதலும் அதனாலெய்துதலின் மேல் வருகின்ற பெண்பாற்கும் இயைபுபடப் பின்வைத்தார். இதற் கியைபுபடத் தொடாக்காஞ்சியும் ஆஞ்சிக்காஞ்சியும் பெண்பாலோடுபட்ட ஆண்பாற் காஞ்சியாதவின் முன் வைத்தார். இவை ஒரு வகை யாற் பெண்பாற்கண்ணு நிலையின்மையுடைய வாயினும் இரண்டி டத்தும் ஒதிச் சூத்திரம் பல்காமற், சிறப்புடைய ஆண்மகற்கே ஒதிப் பெண்பாற் பகுதியுந் தழிஇயினா ரென்றுணர்க. இனி வரு கின்ற பத்தும் பெண்பாற்கே யுரிமையின் அவற்றிற்கும் ஈரைந் தென்பதனைக் கூட்டிமுடிக்க.

பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத்தானும் - பெரும்புகழுடையனாகி மாய்ந்தானொரு வனைச் சுற்றிய பெண்கிளைச் சுற்றங் குரல் குறைவுபட்ட கூப்பீட்டு மயக்கத்தானும்;

என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் விரவியெழுந்த ஓசையை. ஆய்ந்தவென்பது உள்ளத னு,ணுக்கம். "மாய்ந்த பூசன் மயக்க மென்று பாடமாயிற் சுற்றம் ஒருங்கு மாய்ந்த வழிப் பிறரழுத பூசன் மயக்கமென்று கொள்ளினும் அமையும். ஈண்டு மாய்ந்த மகனென்றது.ாஉஞ் சுற்றப்படுவானை அறிவித்தற்கே. ஆண் பாலு ம் உடன்கூறியதன்று. மே ல ன வ ற் றி ற் கு ம் இஃதொக்கும்.

மீனுண் கொக்கின் று.ாவியன்ன’ (உ.எஎ புறப்பாட்டும் அது. தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும்-அச்சுற்றத்தாருமின்றி மனைவியர் தாமே தத்தங் கொழுநரைத் தழிஇயிருந்து அழுதது கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்;

தாமே யெனப் பன்மை கூறினார், ஒருவர்க்குத் தலைவியர் பலரென்றற்கு. ஏகாரஞ் சுற்றத்திற் பிரித்தலிற் பிரிநிலை.

இது செல்வமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது. "கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொலிப்பு என்னும் (உசக) புறப் பாட்டும் அது.