பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/301

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா உ2. °一岛岛

இதில், செங்குட்டுவன் கொடையும் வென்றியும் பரணர் புகழ்தலால், இவ்வொழுகுவண்ணச் செந்துறைப் பாவகை ஏற்புடைத்தாயிற்று.

இனி, வாழ்த்துப்பாடாண் வகைக்கு வண்ணச் செந்துறை

வருமாறு:

பைம்பொற்றாமரைப் பாணர்ச் சூட்டி...பலவே பதிற்றுப் பத்து செய்யுள் ச.அ.

செங்குட்டுவனைப் பரணர் பாடிய இப்பாட்டில் 'பெருந்துறை மணவினும் பலவே, நின்பெயர் வாழியர்' என வருதலால், இது வாழ்த்துப்பாடாண்: அதனாலிதற்கு ஒழுகுவண்ணச் செந்துறைப் பாவகை ஏற்புடைத்தாயிற்று.

இனி, இதற்கு நச்சினார்க்கினியார் கூறும் பொருந்தாப் புத்துரைக் குறிப்பைச் சிறிதாராய்வோம். 'வண்ணப்பகுதி' என்னும் தமிழியற்றொடருக்குரிய செம்பொருளை யிகழ்ந்து விலக்கி, வண்ணம்' எனுந் தமிழ்ச்சொல்லை வருணம்’ எனும் வடசொல்லின் சிதைவாகக் கொண்டனர். "கொண்டு, “வண்ணப் பகுதி வரைவின்று' என்பதற்கு, வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கும் நிலைமையின்று' என்று பொருள் கூறினார்.

வண்ணமும் தொடையும் பொரீ, யெண்ணா என்கவாக லானும், ஐவகை நிறத்தினையும் வண்ணமென்ப வாகாலானும், வண்ணமென்பது இயற்சொல் வருணமென்பது வடமொழித் திரிபு-என்றவரே தெளிந்து கூறினர்; எனினும் சூத்திரத் தில் அத்தமிழ்ச் சொல்லுக்குரிய பொருளை விட்டுத் தாம் கருதிய ஆரிய மரபைப் புகுத்தி மரபு பிறழப் புத்துரை கூறுவர். இ.தவர் மனப்பாங்கிருந்தவாறு படாங்கே இயலடைவில் நிரல் நிரையே சொற்கிடந்தவாறு கண்ணழிப்பின், சூத்திரச் செம்பொருள் தெளிதலெளிது. அதைவிலக்கிச், சுண்ணம் மொழிமாற்று முதலிய அரிய மாட்டேற்று மத்துக்களால் கலக்கி, எவ்வாற்றானும் ஒவ்வாப் புதுப்பொருள் காணத்துணியு மிவரியல்பிற்கிது நல்ல

1. வண்ணம்’ என்ற தமிழ்ச் சொல்லை வருணம்’ என்னும் வடசொல்லின் திரியென்று நச்சினார்க்கினியர் கூறவில்லை. வருணம்’ என்ற வடசொல் "வண்ணம்’ என்ற தமிழ்ச் சொல்லின் திரியென்பதே நச்சினார்க்கினியர் துணி பாகும். ஆயினும் வருணம் என்ற வடசொல்லா ற் குறிக்கப்படும் சாதிவேறுபாட் டினை வண்ணம் என்னும் தமிழ்ச் சொல்லுக்குரிய பொருளாகவுரைத்தது தொல் காப்பியனார் கருத்துக்கு ஒவ்வாது என்பதே நாவலர் பாரதியார் கருத்தெனக் கொள்ளுதல் வேண்டும், - - *