பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உக f_ & చీ

இளம் : இது, பாடாண்திணைக்குத் துறையாமாறு உணர்த் துதல் நுதலிற் று.

(இ-ள்.) கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தல்” முதலாக வேலை நோக்கிய விளக்கு நிலை ஈறாகச் சொல்லப் பட்டனவும், வாயுறை வாழ்த்து முதலாகக் கைக்கிளை உளப் பட்ட நால்வகையும் பாடாண்திணைக்குத் துறையாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் என்றது, கொடுப்போர் ஏத்தல் எனவும், கொடார்ப் பழித்தல் எனவும், கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் எனவும் மூவகைப் படும்.

இதனாற் பெற்றது, சவோரைப் புகழ்தலும், சயாதோரைப் பழித்தலும், ஈவோரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என்றவாறு.

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும்-வென்றியும் குணனும் அடுத்துப் பரந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும்.

அஃது, இயல்மொழி எனவும், வாழ்த்து எனவும், இயல்மொழி வாழ்த்து எனவும் மூவகைப்படும்.

சேய்வரல் வருத்தம் வீட வாயில்காவலர்க்கு உரைத்த கடை நிலையும் சேய்மைக்கண்ணின்று வருகின்ற வருத்தம் தீர வாயில் காவலர்க்கு உரைத்த வாயில் நிலையும்.

கண்படை கண்ணிய கண்படை நிலையும்’-இறைவன் கண் படை நிலையைக் குறித்த கண்படை நிலையும்.

என்றது, அரசன் இனிது துயின்றது கூறல் என்றவாறாம்.

.یہہےم------

1. கடைநிலை-வாயில் நிலை என்னும் துறை. பரிசில்பெற விரும்பிய இரவலர், வள்ளலது வளமனை வாயிலின்கண் நின்று வாயில்காவலரை நோக்கிக் கூறும் முறையில் அமைந்தமையின் கடைநிலை என்னும் பெயர்த்தாயிற்று.

2. கண்படைநிலை-கண்ணின் இமைகள் தம்மிற் பொருந்தும் நிலை; அஃதாவது துயில் கொள்ளும் நிலை. 'என் கண்பொருந்து போத்த்துங் 6) 3.8L நான் கடவேனோ?’ என்பது அப்பர் அருளிச் செயல். கண்ணுதல்-கருதுதல்: குறித்தல்.