பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பா க

இங்ஙனம் பகுத்துரைக்கப்படும் புறத்திணை பன்னிரண்டனுள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை என்னும் ஏழும் மறனுடைமரபின (வீரமே குறித்தன) எனவும், ஏனை வாகை, பாடாண், பொதுவியல் என்னும் மூன்றும் அமர் கொள் மரபின (போர்த்துறையில் கொள்ளத்தக்க பொதுவியல் புடையன.) எனவும் இங்குக் குறித்த கைக்கிளை பெருந்திணை என்னும் இரண்டும் அகத்திணைப்புறன் எனவும் பொருள்வகையாற் பகுத்துரைப்பர் பன்னிருபடலமுடையார்.

"ஆங்கன முாைப்பின் அவற்றது வகையால் பாங்கு றக் கிளந்தனர் என்ப அவைதாம் வெட்சி க ச த்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி முரண் மிகு சிறப்பின் தும்பையுள்ளிட்ட மறனுடைய மரபின் ழே, ஏனை அடிக்கொன் மரபின் வாகையுஞ் சிறந்த பாடாண் வாட்டொடு பொதுவிய லென்ப “கைக்கினை யேனைப் பெருந்திணையென்றாங் கத்திணை விர னடும் அக்த்தினைப் புறனே'. எனவரும் பன்னிருபடல நூற்பாக்களால் இப்பகுப்பு முறை இனிது புலனாதல் காணலாம்.

இங்ங்னம் புறத்திணை பன்னிரண்டெனக் கூறும் இப்பகுப்பு முறை கைக்கிளைமுதல் பெருந்திணையிறாக அகத்திணைகள் ஏழெனவும் அவ்வகத்திணைகளோடு தொடர்புடைய புறத் திணைகள் ஏழெனவும் பகுத்துரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்குப் பொருந்துவதன்று என்பது உரையாசிரியர் இளம் பூரணர் கருத்தாகும்.

“புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக்கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுகல் வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், மொழிந்த பொருளோ டொன்றவைத்தல்’ (மரபு ) என்னுந் தந்திரவுத்திக்கும் பொருந்தாததாகி மிகைபடக்கூறல் தன்னானொரு பொருள் கருதிக் கூறல் (மரபு அ) என்னுங் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமையாத லானும் பொதுவியல் என்பது,

'பல்லமர் செய்து படையுட் டப்பிய நல்லாண் மக்க இளல்லாரும் பெறுதலின்