பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக リー?

கொடை-தாங்கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது. கொடுத்து மனமகிழ்தலும், நிரைமீட்டோர்க்கு வென்றிப் பொருட்டு விளைந்த கொடைப்பகுதியும்;

என ஈரேழ் வந்த வகையிற்றாகும் என்று கூறப்பட்ட பதினான்கும் மீட்டுமொருகால் விதந்த இரு கூற்றையுடைத்தா கும் வெட்சித்திணை என்றவாறு.

எனவே ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று." இனித் துறையென முற்கூறினமையின், இது காரியமாக இதற்குக் காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவேபடும்; அவை இருபெருவேந்தரும் போர்தொடங்குங்காற் பூக்கோளேவி நிரைகோடல் குறித்தோன் படைத்தலைவரைத் தருகவென்றலும் அவர் வருதலும், அவர் வந்துழி இன்னது செய்கவென்றலும், அவர் வேந்தற்கு உரைத்தலும், அவர் படையைக் கூஉய் அறிவித் தலும், படைச்செருக்கும், அதனைக் கண்டோர் கூறலும், அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரங்கி வருந்தலும், நாட்கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும், பிறவுமாம். களவிற் செல்வோர்க்கும் அரவங் கூறினார். அவர் பாக்கத்தே சிங்கி விரிச்சிபெற்றுப் போதலின்.” அவற்றுட் சில வருமாறு:

"கடிமனைச் சிறுசர்க் கடுங்கட் கறவை

வடி நவில் வேலே சன் மறுத்தோம்ப லொட்டா ன டி புனை தோலி ன எண் சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை."

இது படைத்தலைவர் படையாளரைக் கூயினது.

1. படையியங்கரவம் முதலாக எண்ணப்பட்ட பதினான்கு துறைகளும் வெட்சிசூடிப் புகைப்புலத்து ஆநிரைகளைக் கவர்வார்க்கே உரியனவாகக் கொண்டார் இளம் பூரணர். வந்த ஈரேழ் வகையிற்றாகும்’ என்பதனை ஈரேழ் வந்த வகையிற்றாகும் என இயைத்து, இவை பதினான்கும் திரை கவர்வார்க்கும் நிரை மீட்பார்க்கும் உரியவாய் இருவகைப்பட்டு இருபத்தெட்டாம் எனக் கொண் டார் நச்சினார்க்கினியர், இது தொல்காப்பியனார் கருத்தன்று. எனினும் இப் பதினான்கு துறைகளும் நிரைகவர்வார்க்கும் நிரை மீட்பார்க்கும் ஒப்பு உரியன வாகப் பிற்காலத்தில் இயற்றப்பட்ட பெரும் பொருள் விளக்கம் என்ற புறத்தினை இலக்கண இலக்கிய நூலில் இடம் ேெற்றிருத்திலால், இலக்கியம் க்ண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்னும் முறைமை :ற்றி ஒன்று இரண்டாய் இருபத்தெட்டா பி. ற்று’ என நச்சினார்க்கினியர் பொருள் வரைந்து எடுத்துக் காட்டுத் தந்து விளக்கியுள்ள மை பொருத்தமுடையதேயாகும்.

2. களவில் திரை கவரச் செல்வோர் ஆரவாரமின்றிச் செல்வது இயல்பு. ஆயினும் அவர்கள் நற்சொற் கேட்டலாகிய நிமித்தம் பெற்றுப் புறப்படவேண்டி பிருத்தலின் வெட்சி அரவமும் இடம் பெறுவதாயிற்று. - -