பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுது தொல்காப்பியம் பொருளதிகாரம்

உஉஉ. வருத்த மிகுதி சுட்டுங் காலை

உரித்தென மொழிய வாழ்க்கையுள் இரக்கம்.

இளம்பூரணம் :

என்-எனின். இது தலை மகட்குத் தோழிக்கு முரியதோர் திறன் உணர்த்திற்று."

(இ. ள்.) வருத்தமிகுதியைக் குறித்தவழி மனைவாழ்க்கை யுள் இரக்கம் உரித்தென்று சொல்லுவர் என்றவாறு.

எனவே, வருத்தமிகுதியைச் சுட்டாதவழி மனைவாழ்க்கை யுள் இரக்கம் இன்றெனக் கொள்ளப்படும்.

செல்லாமை உண்டே ல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை." (குறள், ககதிக)

'அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள்

பண்பும் அறிதிரோ என்று வருவாரை என்திறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர்

அவலம் படுதலும் உண்டு. ’’ (கலி. க.க)

இதுவுமோர் மரபுவழு வமைத்தது. (கல்)

நச்சினார்க்கினியம் :

இது, கற்புக்காலத்துத் தோழிக்கும் அறிவர்க்கும் உரியதோர் வழுமைக்கின்றது.

1. மனை வாழ்க்கையுள் வருத்தம் மிகுதலைக் குறித்து மனைக்கண் இருக்து இாங்குதற்குரியோர் தலைமகளும் தோழியுமேயாதலின் இந்நூற்பா அவ்விருவர்க்கு

முச்பதோள் திறம் உணர்த்திற்று எனக்கருத்துரை வரைந்தார் இளம்பூரணர்