பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா சல் 酚T2.孤五

தச்சினார்க்கினியம் :

இது, பரத்தையர்க்குத் தலைவிக்குத் தலைவற்கும் படுவ தோர் வழுவமைக்கின்றது.

(இ - ள்.) தம்மு னு விழுமம் பரத்தையர் கூறினும் - தலை வனால் தாம் உற்ற வருத் த த்தைத் தலை விக்குப் பரத்தையர் கூறினும் ஏனைத் தலைவியர் கூறினும் : அவர் வயின் மெய்ம்மை யாக உணர்ந்து - அவர் கூறியவாற்றானே அவ் வருத்தத்தை அவ ரிடத்து உண்மையாக உணர்ந்து ; தலைத்தாட் கழறல் - தலை வன் முன்நின்று கழறுங் கழற்றுரை , தம் எதிர்ப்பொழுது இன்று. தம்மைப் பரத்தையர் எதிர்ப்பட்ட பொழுதின் கண் இல்லை : மலிதலும் - அவர் துயருற நின்றுழிக் கவலாது நீங்கினானென மகிழ்தலும் , ஊடலும் . அவன் பிரிவிற்கு இவர் இரங்கினாரென்ற காரணத்தான் ஊடுதலும் : அவை அலங்கடை - அவ்விரண்டும் நிகழாவிடத்து (எ-று. )

என்பது வெறுத்த உள்ளத்தளாமென்பது கருத்து. எனவே, மலிதலு ம் ஊடலும் நிகழுமிடத்தாயின் தலைத் தாட் கழறு மென். பது பெறுதும், தலைத்தாள். தகுதியற்றிய வழக்கு."

'பொன்னெனப் பசந்தகண் போதெழில் நலஞ்செலத்

தொன்னல மிழந்தகண் துயில் பெறல் வேண்டேன்மன் நின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைகள் என்னுழை வந்துநொந் துரையாமை பெறுகற்பின்.' (கலி.77)

இது, பரத்தையர் முன்னரன்மையின் மலிதலும் ஊடலும் நிகழ்ந்து தலைத்தாட் சுழறியது.

கழறாது கூறியது வந்துழிக் காண்க. தம்முறுவிழுமத்தைப் பரத்தை தலைவிக்குக் கூறுதலாற் பரத்தைக்கும். அவர் கூறத் தான் எளிவந்தமையின் தலைவிக்கும். இவரிங்ங்ன மொழுகலின் தலைவற்கும் வழுவமைந்தது. உம்மை இறந்தது தழி இயிற்று. (கை)

--- 1. தலைத்தாள்-தலைவன் முன்னிலை. உயர்ந்தோர் முன்னிலையிற் கூறு தலை அவர் தம் திருவடிக்கு உரைப்பதாகக் கூறுதல் மரபாதலின் தலைத்தாள் தகுதியற்றிய வழக்கு என்றார். தாட்டலை எனற்பாலது "தலைத்தாள்’ என முன் . பின். எாகத் தொக்கு கின்றது இல்முன் எனற்பாலது முன்றில் என மருவி வழங்கினாற் போல்வதேடிர் மரூஉ முடிபு. கழறல்-இடித்துரைத்தல். தம் எதிர்ப்பொழுது-பரத் ుకు தம்மை எதிர்ப்பட்ட காலத்து, மலிதல்- மகிழ்தல். ஊடல்-பிணங்குதல்.

கழறல் இன்று என g ہالہiف •