பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா சக. 瘤”莎、

என் செய்வாங் கொல்லினி நாம் ; பொன்செய்வாம்' (கலி 60)

எனவுந் தலைவி உறழ்ந்து கூறியவாறு காண்க.

இது தலைவன் வருத்தங்கூற அதனை ஏற்றுக்கொள்ளாது உறழ்தலின் வழுவாய் நாண்மிகுதியாற் கடிதின் உடம்படாமை யின் அமைந்தது.

எல்லாவிஃதொத்தன்' ( கலி, 61 ) என்னுங் குறிஞ்சிக் கலியுள்,

'ஈத விரந்தார்க்கொன் நாற்றாது வாழ்தலிற்

சாதலுங் கூடுமா மற்று' (கலி 61)

எனத் தலைவன் கூறியவழி,

'இவடந்தை, காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப்பொருள் யாது நீ வேண்டியது:" (கலி. 61)

எனவும்,

'மண்டமர் அட்ட களிறன்னான் தன்னையொரு

பெண்டிர் அருளக் கிடந்த தெவன் கொலோ' (கலி. 61)

எனவும் தோழி யுறழ்ந்து கூறியவாறு காண்க.

இதுவும் அவன் வருத்தத்திற்கு எதிர்கூறத்தகாதன கூற வின் வழுவாய்த் தலைவி கருத்தறிந்து உடம்பட வேண்டுமென்று கருதுதலின் அமைந்தது.

'அணிமுகம் மதியேய்ப்ப..............

羽哆象 * * s * *兹·多 歌 > a 感岑哆亨经够 * 修更孕

முத்தியெறிந்து விடற்கு'. (கலி. 64)

இது, தலைவன் உயர்மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறி யது. இது நகையாடிக் கூட்டத்தை விரும்பிக் கூறிய மொழிக்கு உறழ்ந்து கூறலின் வழுவாய் அவளும் நகையாடிக் கூறலின் அமைந்தது.