பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல் - நூற்பா ச.அ #டுக.

சிறப்பினையுடைய இன்பம்; தன்வயின் வருதலும் வகுத்த பண்புதலைவன் கண்ணும் நிகழ்ந்து இன் பஞ் செய்தலுங் காமத்துக்கு முதலாசிரியன் வகுத்த இலக்கணம் (எ-று.)

தலைவன் தன்மை என்ப தொன்றின்றி நந்தன்மையெனக் கருதுதலின் யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் முனியாது இன்பமெனக் கொள்வனெனக் கூறியவற்றை அவன் இவை இன்பந் தருமென்றே கோடலின் வழுவமையப்பட்டன. உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. ' (சக}

ஆய்வுரை :

இஃது அகத்தினையொழுகலாற்றில் மறைத்துக் கூறும் கூற்றுவகையாகிய உள்ளுரையால் உளதாம் பயனகறுகின்றது,

( இ-ள்) முடிவில்லாத சிறப்பினையுடைய அகத்தினை யொழுகலாற்றல் உளதாகிய இன்பம் இத்தகைய உள்ளுறையிலே விளங்கித தோன்றும்படி செய்த சிறப்பும் முன்னைச் சான்றோர் வகுத்துரைத்த பண்புடைய சொல்லாடல் முறையால் விளைந்ததே

எ-று.

தோழியும் தலைவியும் தலைவனுடன் உரையாடுங்கால் தம் உள்ளக் கருத்தினை வெளிப்படக்றாது மறைத்துக் கூறு தலா கிய இவ்வுரையாடல் முறை இதனைக்கேட்கும் நுண்ணுஎணர்வினார்க்கு இன் பந்தரவல்லதாகும். நம்முடைய தலைவன் தன் தன்மையென்பதொன்றின்றி நம் தன்மையன் என்று கருதுதலின், யாம் ஒன்று நினைந்து ஒன்று கூறினும் அவன் அச்சொற்களைக் கேட்டு வெகுளாது இன்ப மெனக் கொள்வன் என்ற கருததால் தலைவியும் தோழியும் தலைவனுடைய குறைகளைக் குறிப்பாகப் புலப்படுத்தி இடித்துரைக்கும் நிலையிற் கூறப்பட்ட உள்ளுறைப் பொருண்மையினைக் கேட்டுணர்ந்த தலைவன் இவை இன்பத் தரும் என்றே ஏற்றுக்கொள்வானாதலால் இத்தகைய உள்ளுறைப் பொருண்மையால் தலைமக் களது இன் பவுணர்வு வளர்ந்து சிறக் ஆம என்பதனை ஆசிரியர் இச் சூத்திரத்தாற் புலப்படுத்தியவாறு காணலாம்.

1. தலைவன் தன் தன் தன்மையென்ப தோன் தின் நீ கக்தன்மை.னேன க்

கருதுதலின்' என்றிருத்தல் வேண்டும்,