பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ாடுக தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உசல். மங்கல மொழியும் அவையல் மொழியும்

மாறில் ஆண்மையில் சொல்லிய மொழியுங் கூறிய மருங்கிற் கொள்ளும் எனப.

இளம்பூரணம் :

என்- எனின். இதுவும் உள்ளுறைப் பாற்படுவதோர் சொல் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மங்கலமொழி முதலாகச் சொல்லப்பட்டனவும் உள்ளுறைப் பாற்படும் என்றவாறு.

மங்கலமொழியாவது-மங்கலத்தாற் கூறுஞ்சொல். அது செத்தாரைத் துஞ்சினார் என்றல்,

அவையல் மொழியாவது இடக்க ரடககிக் கூறுதல். அது கண் கழி.இ வருதும் என்றல்.

மாறிலாண்மையிற் சொல்லிய மொழியாவது ஒருவனைச் சிங்கம் வந்த தென்றாற்போற் கூறுவது,

அவையெல்லாஞ் சொல்லாற் பொருள்படாமையின் உள்ளுறைப் பாற்படும். இன்னும் இவ்வாற்றாற் பொருள் கொள்ளுமாறு ஒல்லுவ தொல்லும்’ என்னும் புறப்பாட்டினுள் (புறம். ககசு) * நோயில ராக நின் புதல்வர்” எனவும் சிறக்கநின்னாளே” எனவும் வரும் மங்கலச் சொல் கெடுக என்னும் பொருள்பட்டவாறு காண்க.

'இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து’’’ (கலி. அக.) என்றது தீயொழுக்கம் ஒழுகினாய் என இடக்கரடக்கி அவையல்மொழியால் ஒழுக்கக் குறைபாடு கூறியவாறு. (சக)

வைகிய மொழியும்’ எனவும் கூறியல் மருங்கின்' எனவும் பாடங் கொண்டார் நச்சினார்க்கினியர், .

நச்சினார்க்கினியம் :

இது, மேன் மூன்றுபொருளும் வழுவாயன மக என்றலின் எய்தாத தெய்வித்தது .

1. மங்கலமொழி, அவையல்மொழி, ஆண்மையிற் சொலியமொழி என்னும் இவையெல்லாம் சொல்லால் வெளிப்படப்பொருள் தராது மறைந்த பொருளை. புணர்த்துதலால் இவையும் ஒருவகை உள்ளுறையின் பாற்படும் என்பதாம்.

2. அவையல்மொழியும்' என்பது இளம்பூரணர் கொண்ட பாடம்,