பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ாடுக தொல்காப்பியம் - பொருளதிகாரம்

பாட்டியலில்) விலக்கப் படுவன சில அவர் பாற் சார்த்திக கூறப் படுதலும் உண்டென் கின்றது.

( இ-ள்) தலைமகட்கு ஆகாதன என வில கப்படும் சினம், பேதைமை, பொறாமை, வறுமை ஆகிய நான்கும் ஒரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாகத் தலைமக்கள் பார் சார்த்தியுரைக்கப் பட்டு வரும் எ-று.

சினம் என்பது, நீண்ட நேரம் நிலைத் திருக்கும் வெகுளி. பேதைமை-அறியாமை நிம்பிரி-பொறாமை தோன்றும் மனக் குறிப்பு, நல்குரவு-நுகர் பொருளில்லாமையாகிய வறுமை. சிறப் பொடு வருதலாவது, ஒரு பொருளைச் சிறப்பித துக் கூறும் முறை யில் இயைந்து வருதல். சின முதலாக இங்குக் கூறப்பட்டவை நான்கும் தலைமக்கட்கு ஒவ்வாதன வாயினும் அவர்தம் உயர்நத பண்புகளில் ஒன்றனைச் சிறப்பித்தற்குச் சார்பாயவரின் விலக் கப் படுதல் இல்லையென்பதாம.

உசக, சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு

அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே.

இளம் பூரணம் :

என்-எனின். மெய்ப்பாட்டியலுள் நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்கட் காகாதன எடுத்தோதுகின்றா ராகலின், அவற்றுள் ஒருசாரன ஒரோவிடத்து வருமென்பது உணர்த்திற்று.

இச்சூத்திரம் எதிரது நோக்கிற்று.*

(இ. ள்) சினமும் பேதைமையும் நிம்பிரியும் நல்குரவும் என்று சொல்லப்பட்ட அந்நான்கு வகையும் யாதானும் ஒரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாக வரும் என்றவாறு.

'கொடியியல் நல்லார் குரல்நாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க்கு அடியரோ ஆற்றா தவர்.' (கலி. அஅர்

1. இது, பின் வரும் மெய்ப்பாட்டியலில் தலைமக்கட்கு ஆகாதன శT ఢా விலக்கியவற்றுள் சிலவற்றைக் குறித்துக் கூறுதலின் 'இச்சூத்திரம் எதிரது கோக். கிற்று' என்றார்.