பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா இல் ாடுை

இதனுள் தொடிய எமக்கு நீ யாரை' என்பது சினம்பற்றி வரினும் காமக் குறிப்பினாற் புணர்ந்த தலைமகள் கூறுதலின் அவள் காதலைச் சிறப்பிக்க வந்தது.'

செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று அவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய..'

(கலி. க.க)

என்பதனுள் யான் யாங் கறிகோ' என ஏதம்பற்றி வந்த பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்தது.

'அசனகர் கொள்ளா அலர்தலைத் தந்து

பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன் மகனல்லை மன்ற இனி.' - (சுலி. க.க)

என்பதனுள் தலைவி மகனல்லை' எனல் நிம் பிரியாகிய வெறுப் புப்பற்றி வந்தது.

இதுவும் பிரிவற்றாமையைச் சிறப்பிக்க வந்தது.

'உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்

தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழைவொடு வருதி நீயே இஃதோ ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னும் இவ் ஆரே.

t

(குறுந் உண்டு)

- இதனுள் "ஒரான் வல்சிச்சீரில் வாழ்க்கை எனத் தலைமகன் செல்வக் குறைபாடு கூறிப் பெருநலக்குறுமகள் வந்தென விழ வாயிற் றென்னுமிவ்வூர்” என்றமையான் நல்குரவு பற்றித் தலை மகனைச் சிறப்பிக்க வந்தது. இச்சூத்திரத்துள் வரைந்து கூறாமை. யின் தலைவியுந் தலைவனுந் தோழியுஞ் செவிலியுங் கூறப்பெறு வர் என்று கொள்க. (இல்)

1. 'யான்யாங்கறிகே எனப் பேதைமைபற்றிவந்த பிரிவசந்தா மையைச்

சிறப்பிக்கவந்தது' என்றிருத்தல் பொருத்தமாகும்.

2. கல்குரவு பற்றித் தலைமகளைச் சிறப்பிக்க வந்தது என்றிருத்தல் வேண்டும்.